விளாம்பழம்.. வியக்க வைக்கும் பழம்.. பெண்கள் இந்த விளாம்பழத்தை சாப்பிடலாமா.. அடடே இது தெரியாம போச்சே

339 0

சென்னை:

பல வியாதிகளை குணப்படுத்தும் அற்புத பழம்தான் விளாம்பழம்.. பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா?

விளாம்பழத்தில், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் A சத்துக்களும் நிறைந்துள்ளன.. பித்தத்தை போக்கக்கூடிய மிகச்சிறந்த பழமாக இது திகழ்கிறது.. இந்த பழத்தில், வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே, பித்த கோளாறுகள் மொத்தமும் நீங்கிவிடுமாம்.

குடல் ஆரோக்கியம்:

குடல் ஆரோக்கியத்துக்கு தாராளமாக விளாம்பழம் சாப்பிடலாம்.. குடலிலுள்ள பூச்சி புழுக்களை அழித்து வெளியேற்றக்கூடியது இந்த பழம்.. அத்துடன், வயிற்று புண், வாய்ப்புண்ணையும் ஆற்றுகிறது.. அஜீரண குறைபாடு இருந்தாலோ, பசியின்மை ஏற்பட்டாலோ, விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.விளாம்பழம்.. வியக்க வைக்கும் பழம்.. பெண்கள் இந்த விளாம்பழத்தை சாப்பிடலாமா.. அடடே  இது தெரியாம போச்சே | Do you know the Excellent Health Benefits of Wood  Apple and ...

மூட்டு வலிக்கும், முழங்கால் வலிக்கும் இந்த விளாம்பழம் உதவுகிறது.. கால்சியம் நிறைந்த இந்த பழங்கள், எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதியை தருபவை.. தயிருடன் விளாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், எலும்புகள் பலம் பெறுமாம்.

உதிரப்போக்கு :

விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தம் அதிகரிப்பதுடன், கெட்ட செல்களை அழிக்கப்பட்டு, புதிய ரத்தம் சுரக்கிறது. கண்பார்வை தெளிவுபெற உதவுகிறது இந்த பழங்கள்.. பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு விளாம்பழம் போல சிறந்த தீர்வு இருக்க முடியாது..

குழந்தைகளுக்கு இந்த பழத்தை தருவதால், அவர்களது நினைவாற்றல் அதிகரிக்க செய்யும்.. நரம்பு தளர்ச்சி இருந்தால், இந்த பழத்தை வெல்லத்துடன் கலந்து சாப்பிடலாம்.. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.. பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முக சுருக்கம், வறட்சி போன்றவை போக்கக்கூடிய இந்த விளாம்பழம். அதனால்தான், இந்த பழத்தை வைத்து, குளியல் பொடி தயார் செய்யப்படுகிறது.

சதைப்பகுதிகள்:

இதற்கு, விளாம் பழத்தின் சதைப்பகுதியை தனியே எடுத்து காய வைக்க வைண்டும்.. அதனுடன் சம அளவு கஸ்துாரி மஞ்சள், பார்லி, பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு போன்றவை எல்லாம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டால், சோப்புக்கு பதிலாக உடம்பில் பூசி குளிக்கலாம். இதனால், தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகள் மறையும். பிரசவமான பெண்கள் விளாம்பழத்தை, கூழ்போல செய்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம் பெறும்.

விளாம்பழத்தின் விழுது எடுத்து, அதில் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு கழுவி வந்தால், முகம் பொலிவுபெறும்.

Related Post

Generated Image November 22 2025 6 06PM

ஊர் எல்லையில் கிடந்த சடலம்!! “காதல் தோல்வியால் உயிரைவிட்ட இளம்பெண்..” காத்திருந்து பழிவாங்கிய தாய் மாமன்..!

Posted by - November 22, 2025 0
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை  சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால்…

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

Posted by - March 14, 2025 0
தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக்…

1 ரூபாய் அனுப்பி பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி

Posted by - March 10, 2023 0
தூத்துக்குடி: நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி…

அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்

Posted by - March 24, 2025 0
மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு…

சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 10, 2024 0
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *