livetelecast tngovnt

“சட்டப்பேரவை முழு நேரலை வெறும் உருட்டா?” – தவெகவுக்கு அதிமுக கண்டனம்

74 0

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “நேரலை என்பது வெறும் உருட்டா?. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அதிமுக விமர்சித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

முழு நேரலை.. முழு நேரலை… அத்தனையும் உருட்டா சார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நன்றாக இருக்கிறது சார் உங்கள் மாற்றம். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவது போன்ற ஐடியா இல்லை போல, அப்படித்தானே சார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, “இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும்” என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Post

“மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை” – பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது என்ன? – MaKa Stalin

Posted by - March 25, 2024 0
 PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம்…

பெண்களுக்கான ஜாக்பாட் – ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி – யாருக்கு கிடைக்கும்?

Posted by - December 15, 2024 0
TAHDCO Loan Scheme: மகளிருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் (Mahila Adhikarita Yojana) கீழ் கிடைக்கும், மத்திய அரசின் கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். மகளிருக்கு…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

Posted by - January 2, 2024 0
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? புரோட்டீன்,…
Generated Image January 01 2026 12 01PM

பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

Posted by - January 1, 2026 0
2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள். குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *