விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்ப்பு..

238 0

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கவேண்டும் என விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படுமா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என நேற்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆலோசனை முடிந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும், இதற்கான டோக்கன் ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Post

ஏதாச்சு இருந்தா சொல்லுங்க, விஷாலுக்கு பதிலடி கொடுத்த மேயர்

Posted by - December 5, 2023 0
விஷால் மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு பெரும் பலத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வருகிறார் நடிகர் விஷால். இவர் அடுத்து மாஸ் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற…

ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் சீர்கேட்டை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் பணி நீக்கம் – இ.பி.எஸ் கண்டனம்..!!

Posted by - September 6, 2024 0
இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது : திமுக அரசின் 40 மாத கால ஆட்சியில் ஆவின் நிறுவனம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது.மிக அத்தியாவசியப் பொருளான பால் வழங்கும்…

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…

2023ல் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள்.. கண் கலங்க வைத்த மயில்சாமி, குணசேகரன்

Posted by - December 16, 2023 0
இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் நிறைய நல்ல கலைஞர்களை நாம் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு மரணமும், தங்கள் வீட்டிலேயே நடந்தது போல் மக்கள் கதறி அழுத…

தவெகவின் கட்சி சின்னம் லிஸ்ட் ரெடி! விஜய் டிக் அடிக்கப்போவது எது?

Posted by - May 22, 2025 0
விஜய் கட்சியை தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில்  தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் என்கிற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *