வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை

276 0

நியூயார்க்:

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும். ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.People must prepare for heat waves – UN warning

இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:- வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும்.

அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது. வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது.

வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார். வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

புதிய சிக்கலில் நித்தியானந்தா : பல லட்சம் ஏக்கர் அமேசான் காட்டை ஆக்கிரமித்ததாகப் புகார்!

Posted by - April 7, 2025 0
சர்ச்சைக்குப் பெயர் பெற்ற இந்து சாமியார் நித்தியானந்தா, தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பல லட்சம் ஏக்கர் அமேசான் காடுகளை ஆக்கிரமித்த புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். பரபரப்பை…

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு

Posted by - August 23, 2023 0
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக்…

”மாட்டிக்கிட்ட” பொய்யா சொல்றியே பங்காளி..! பாக்., எப்படிலா உருட்டி இருக்கு பாரேன்..!

Posted by - April 25, 2025 0
பஹல்காம் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தானை நம்ப முடியாததற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் உலக நாடுகளுக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது. ”நோ”…

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் – மகளிரை பெருமைப்படுத்த சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Posted by - March 8, 2023 0
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு டூடுல் வெளியிட்டு பெண்களை கூகுள் கவுரவித்துள்ளது. பெண்களுக்‍கு பெண்கள் ஆதரவாக இருக்‍க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தன் சக பெண்களுக்‍கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *