ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

235 0

திருப்பதி:

ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில் தக்காளிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.தக்காளி விலை கிடுகிடு சரிவு: கிலோ ரூ.50-க்கு விற்பனை | Sigaram News

இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று விவசாயி ஒருவர் தக்காளி விற்பனைக்கு கொண்டு வந்தார். அவர் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.50 என கூவி கூவி விற்பனை செய்தார். இதனை கேட்டதும் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க வரிசையில் நிற்கும்படி வியாபாரி கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் வரிசையை கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். 2 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தக்காளி வாங்கிச் சென்றனர். அதிகளவு பொதுமக்கள் வந்ததால் ஒருவருக்கு 3 கிலோ தக்காளி மட்டுமே விவசாயி வழங்கினார். உழவர் சந்தை பகுதியில் தக்காளி வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

Posted by - May 30, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி…

640 கிலோ மீட்டர்ல இருக்கு..! எப்போ மழை? எவ்வளவு வேகத்தில் காற்று வீசப்போகிறது?

Posted by - December 8, 2022 0
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ்…
sdf

கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!

Posted by - November 22, 2025 0
கிரெடிட் கார்டு EMI-ஐ தேர்ந்தெடுப்பதற்கு முன், அது என்ன? அதன் நன்மை என்ன? ஆபத்துகள் என்னென்ன? என்பதை புரிந்துகொள்வது அவசியம்.இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில்…

பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம்

Posted by - July 3, 2023 0
திருப்பதி: ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது. தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை. ஊறுகாய் தயாரிப்பு…

மும்பையில் சினிமாவை மிஞ்சும் விபத்து: சுங்கசாவடியில் 6 கார்கள் மோதியதில் 3 பேர் பலி

Posted by - November 10, 2023 0
மும்பை: மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது. மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *