வெறும் சப்பாத்தி சாப்பிட்டு போரடிச்சுருச்சா? அப்ப மசாலா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க…

248 0

ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன சமைப்பது என்று யோசிப்பீர்களா? எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்தி செய்யலாம் என்று பார்த்தால், சப்பாத்தியும் போரடித்துவிட்டதா? ஆனால் நீங்கள் சப்பாத்தி பிரியரா? அப்படியானால் அடுத்தமுறை வெறும் சப்பாத்தியை செய்வதற்கு பதிலாக மசாலா சப்பாத்தியை செய்யுங்கள்.

இந்த மசாலா சப்பாத்தி வெறுமனே சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இல்லாவிட்டால் ஊறுகாயுடனும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு வேலைக்கு செல்வோர் காலையில் செய்து சாப்பிட ஏதுவாக இருக்கும்.

உங்களுக்கு மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.வெறும் சப்பாத்தி சாப்பிட்டு போரடிச்சுருச்சா? அப்ப மசாலா சப்பாத்தி செஞ்சு  சாப்பிடுங்க... | Masala Chapathi Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 2 கப்

* கசூரி மெத்தி இலை – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தயிர் – 1/2 கப்

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கசூரி மெத்தி, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த மாவு கலவையின் நடுவே ஒரு குழி தோண்டி, அதில் தயிர் மற்றும் சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒருமுறை பிசைந்து, 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு சப்பாத்தி உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

Related Post

சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்

Posted by - April 12, 2023 0
தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், வெந்தயக்கீரை- ஒரு…

அம்மாவையும் ஒழிக்க முடிவெடுக்கும் குணசேகரன்? எதிர்நீச்சல் 2 அதிர்ச்சி ப்ரோமோ

Posted by - December 8, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் இருவரும் கைதுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில்…

அடிக்கடி முட்டை குழம்பு செய்வீங்களா.. அடுத்த முறை பாண்டிச்சேரி ஸ்டைல்-ல பண்ணுங்க.. செமயா இருக்கும்…

Posted by - September 8, 2023 0
உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை குழம்பு செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முட்டை குழம்பை செய்வதாக இருந்தால், அதை பாண்டிச்சேரி ஸ்டைலில்…

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் 5 பைனலிஸ்ட் சம்பளம், டைட்டில் வின்னருக்கு தான் கம்மியா? லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களை பிடித்த போட்டியாளர்களின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் இணையத்தில் பிக் பாஸ்…

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இர்பான் நடத்திய Gender Reveal பார்ட்டி. வீடியோவிற்கு கீழ் குவியும் கமெண்ட்ஸ்.

Posted by - May 21, 2024 0
குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பிரபலம் தெரியாதவர்கள் யாரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *