1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

211 0

தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு ம், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் இவ்விரு பொருட்களையும் கொண்டும் சுவையான உளுந்து சட்னி தயார். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சத்தானமும் கூட.

உங்களுக்கு உளுத்தம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க..  அருமையா இருக்கும்... | Ulundu Chutney Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 5

* தேங்காய் – 1/4 கப்

* சின்ன வெங்காயம் – 5

* புளி – 1 டீஸ்பூன்

* பூண்டு – 4

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வறுக்க வேண்டும்.

* பின்பு வத்க்கிய பொருட்களை இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடனதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுந்து சட்னி தயார்.

Related Post

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

Posted by - March 14, 2023 0
இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது.…
Generated Image January 18 2026 4 47PM

Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்..

Posted by - January 18, 2026 0
Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான…

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி

Posted by - February 6, 2023 0
எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.     எஸ்.ஏ. சி ஒரு இயக்குனராக…

2026 சனி பெயர்ச்சி பலன்கள் — 4 ராசிகளுக்கு தனித்துவ யோகம் மற்றும் எச்சரிக்கை!

Posted by - December 20, 2025 0
2026-ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலமாக கருதப்படும் சனி பெயர்ச்சி (Saturn Transit) 2025-இல் ஆரம்பமான நிலையில் 2026 முழுவதும் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில்…

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய கோபி! கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

Posted by - April 24, 2023 0
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். அதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். அந்த ரோலில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அவரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *