10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..

268 0
10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 01 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால் தேர்வு தேதி அறிவிப்பு எப்போது என 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்நோக்கி காத்திருந்தனர். மேலும் ஜெஇஇ, நீட் போன்ற தேர்வுகளை கருத்துக்கொண்டு அட்டவணை தயார் செய்யப்படும் என்றும் அறிவிக்ப்பட்டிருந்தது. இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதிகளை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி,

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது.

26.03.2024 – தமிழ், இதர மொழிப்பாடங்கள்
28.03.2024 – ஆங்கிலம்
01.04.2024 – கணிதம்
04.04.2024 – அறிவியல்
06.04.2024 – விருப்ப மொழிப்பாடம்
08.04.2024 – சமூக அறிவியல்

11 ஆம் வகுப்பபு பொதுத்தேர்வுகள் மார்ச் 04 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 01 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

அமோனியா வாயு கசிவு விவகாரம்… தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு

Posted by - December 27, 2023 0
சென்னை : சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…
Generated Image January 12 2026 10 59AM

கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு விஜய் இன்று ஆஜராகிறார்

Posted by - January 12, 2026 0
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். இந்த விசாரணை 3 நாட்கள்…

நீண்ட உறக்கத்திலிருந்து முதல்வர் எப்போது விழிப்பார்..? – அண்ணாமலை விமர்சனம்..!!

Posted by - May 25, 2024 0
நீண்ட உறக்கத்திலிருந்து தமிழக முதல்வர் எப்போது விழிப்பார் ? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

போலீஸ் போட்ட 33 நிபந்தனைகள்.. திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு சரித்திரம் படைப்பாரா TVK விஜய்?

Posted by - September 26, 2024 0
சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அவரே வெளியிட்டார். கொடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில்…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *