vijay

Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!

71 0

Singapen Athiradi Padai: மே 10 தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்​கப்​பெSingapen Athiradi Padai: மே 10 தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்தார்.ண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்தார்.

முதல்​வர் விஜய் இன்று (ஜூன் 9) சிங்​கப்​ பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை தொடங்கி வைத்து உள்ளார். சென்னை எழும்​பூர், ராஜரத்​தினம் மைதானத்​தில் முதல்வர் விஜய் இன்று மாலை இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். முதல்வராக விஜய் பங்கேற்கும் முதல் அரசு விழா இதுவாகும்.முன்னதாக மே 10ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்​கப்​ பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்து இருந்தார். பதவியேற்பு விழா மேடை​யிலேயே இதுதொடர்​பான கோப்​பில் விஜய் கையெழுத்து இட்டிருந்தார்.

சிங்கப்பெண் அதிரடிப் படையின் சிறப்பு என்ன?

சிங்கப்பெண் அதிரடிப் படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​ட நிலையில், ஒரு எஸ்​.பி. 2 டி.எஸ்​.பி., மற்றும் 4 ஆய்வாளர்​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டனர்.

பெண் ஐ.ஜி. தலைமையில் பெண்கள் பாதுகாப்புக்கு என தனியாக உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படை, இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.

இலச்சினை, காணொளி வெளியீடு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். பின்னர் இது தொடர்பான சிறப்பு திட்ட இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட்டார். தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப் படையின் செயல்பாடுகள் குறித்த ஏஐ காணொளியும் வெளியிடப்பட்டது.

அதையடுத்து பிரத்யேக வாகன இயக்கத்துக்கான ரிமோட்டை இயக்கி முதல்வர் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைத்தார். உடனே மேடையை விட்டு கீழே இறங்கிவந்த முதல்வர் விஜய், அதிரடிப்படை வாகனத்தை இயக்கிப் பார்த்தார். அதைத் தொடர்ந்து சிங்கப்பெண் அதிரைப் படை வாகனம் சீறிப் புறப்பட்டது.

Related Post

பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

Posted by - April 22, 2025 0
சட்டசபையில் இன்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் திமுக-வின் உட்கட்சி மோதல் அம்பலமாகியுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு

Posted by - July 1, 2025 0
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு…

தக்காளி விலையுடன் போட்டி போடும் சின்ன வெங்காயம்- கோவையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

Posted by - July 10, 2023 0
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *