வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

187 0

சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான சோதனைகள் கர்நாடகாவின் மைசூர் மற்றும் பாகல்கோட்டை சர்க்கிளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
தற்போது நம் நாட்டில் மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை குறைத்து விட்டனர். பெட்டிக்கடை, டீக்கடை முதல் பெரிய பெரிய மால், கார் ஷோரூம் வரை அனைவரும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்து விட்டது.

வங்கி கணக்கில் மட்டும் பணம் இருந்தால் போதும். செல்போனை எடுத்து கொண்டு எந்த கடைக்கு வேண்டுமானாலும் சென்று பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை ஒரு நிமிடத்துக்குள் விற்பனையாளரின் வங்கி கணக்கிற்கு மாற்றி விட முடியும்.

ஆனால் நாடு முழுவதும் மக்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் தபால் அலுவலகங்களில் இன்னும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு செல்லும்போது கையில் பணம் வைத்திருக்க வேண்டிய நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி யுபிஐ மூலமாக தபால் அலுவலகங்களில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Related Post

உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ பெருமிதத்துடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

Posted by - January 23, 2025 0
தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும்…

மருதாணி.. செக்கச்சிவந்த மருதாணி.. ஆமா, மருதாணி வெச்சதுமே, கைகள் சிவப்பு கலரா மாறிடுதே.. ஏன் தெரியுமா

Posted by - November 3, 2023 0
சென்னை: அழகுக்காக மட்டுமே நினைத்து, பலரால் ஒதுக்கப்படுவது மருதாணி.. உண்மையை சொல்லப்போனால், இந்த மூலிகையின் அற்புத பலன்களை பட்டிலியட்டு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நீளும் நன்மைகளை,…
Generated Image November 04 2025 4 32PM

இந்திக்கு 3 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒருநாள்: CBSE 10-ம் வகுப்பு தேர்வில் கூட மொழி வேறுபாடா?- அன்புமணி கண்டனம்

Posted by - November 4, 2025 0
இந்தி தேர்வுக்கு முன்னும், பின்பும் 2 மற்றும் 4 நாட்கள் இடைவெளியில் உள்ளது. தமிழ் தேர்வுக்கு முன்னும், பின்பும் ஒரேயொரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது.பா.ம.க. தலைவர்…

அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Posted by - June 25, 2024 0
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ஆம் ஆண்டு இதே நாளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்தாக கூறியுள்ளார். அரசியலமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *