1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு

330 0

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.8 People Including Children Get Trapped Mid-Air At 1,200 Feet In Cable Car

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று காலை 7 மணியளவில் 6 குழந்தைகள், 2 பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் ஒரு கேபிள் காரில் பயணம் செய்தனர். தரையில் இருந்து சுமார் 1,200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது. இதனால் அந்த கேபிள் கார் பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது. இந்நிலையில், 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தற்காலிக பிரதமர் அன்வர் உல் ஹக் ககர் தெரிவித்துள்ளார்.

Related Post

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

Posted by - August 22, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்… அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

Posted by - December 10, 2022 0
முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான பியான்கா,…
Generated Image November 22 2025 10 28AM

மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்

Posted by - November 22, 2025 0
தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள்…

மங்கோலியாவில் தீவிரமாக பரவி வரும் பிளேக் நோய்

Posted by - June 28, 2023 0
உலன்பேட்டர் :  மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வருகிறது. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும். இதற்கு தகுந்த சிகிச்சை…

காதலிக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.900 கோடி சொத்தை உயில் எழுதி வைத்த முன்னாள் இத்தாலி பிரதமர்

Posted by - July 10, 2023 0
ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *