15 இடங்களில் சதமடித்தது… மக்கள் கடும் அவதி…!

370 0

சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது.

அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கடப்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரஹீட் வெயிலும் கொளுத்தியது.சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும்,

மீனம்பாக்கம் மற்றும் எண்ணூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. கரூர் – பரமத்தி மற்றும் புதுச்சேரியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை, கடலூர் மாவட்டங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகவும்,திருச்சியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல, பாளையங்கோட்டை, தஞ்சை, விருத்தாசலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், ஈரோடு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் ஆகிய பகுதிகளில் 101 டிகிரி வெயில் வாட்டியது. கடும் வெயில் நிலவுவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.இதனிடையே தமிழ்நாட்டில் ஓரீரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Post

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்! : வானதி சீனிவாசன்

Posted by - April 10, 2024 0
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான…

பிரபாகரன் மகள் துவாரகா உருவம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது? சர்வதேச உளவு அமைப்புகள் சந்தேகம்

Posted by - November 28, 2023 0
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள்…

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - December 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…

எம்.ஜி.ஆர்., ஆக முயன்று தோற்ற மு.க. முத்து – தந்தை கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. ஜெ., உதவி

Posted by - July 19, 2025 0
மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி. ஆரை போலவே திரைப்படங்களில் நடித்து பிரபலமாக முயன்று மு.க. முத்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *