மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற கர்ப்பிணி

231 0

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கர்ப்பிணி ஒருவர் மலையில் இருந்து நடந்தே ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்று ஆபத்திலிருந்து தப்பியுள்ளார். அணைக்கட்டு அருகே உள்ள ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (22). தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு  நடந்து சென்ற கர்ப்பிணி | woman walking 15 kilometers to hospital due to  lack of roads in the ...

சிவகாமி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் சிவகாமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது.

டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார். முத்தன்குடிசை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமென்றால் சுமார் 30 கிலோமீட்டர் உள்ள ஒடுகத்தூர், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்மியம்பட்டு அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறைக்கு தான் செல்ல வேண்டும்.

என்ன செய்வது என தெரியாமல் திணறிய நேரத்தில், சிவகாமியை முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து நடைபயணமாக ஆஸ்பத்திரி செல்ல அழைத்து வந்தனர். கர்ப்பிணி பெண் பிரசவ வலியோடு நடந்தார். தெள்ளை மலை கிராமம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். சாலை வசதி மட்டும் இருந்திருந்தால் இது போன்ற ஆபத்தான சூழல் உருவாகி இருக்காது. எங்களது நீண்ட கால சிரமத்தை போக்கும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Post

Generated Image November 22 2025 5 51PM

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

Posted by - March 18, 2023 0
1/ 5 தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2/ 5 நேற்று தங்கம் விலை…

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? – உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Posted by - January 8, 2025 0
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு…

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *