2026 சட்டமன்ற தேர்தல்: நிறங்கள் அடிப்படையில் தொகுதி பிரிப்பு.. திமுகவின் புதிய வியூகங்கள்

253 0

திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் திமுக, தங்களின் முந்தைய வெற்றி தோல்விகளின் அடிப்படையில் தொகுதிகளை நிறங்கள் வாரியாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை 10 மாதங்களுக்கு முன்பே திமுக தொடங்கி அதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தொகுதிகளை மண்டல வாரியாக பிரித்து அவற்றுக்கு அமைச்சர்கள், எம்பி எம்எல்ஏக்களை பொறுப்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது. மீண்டும் ஆட்சியமைப்பது மட்டுமின்றி 200க்கும் அதிகமான தொகுதிகளை கைபற்றுவதற்காக, “வெல்வோம் 200, படைப்போம் வரலாறு” என்ற திட்டத்தையும் திமுக தலைமை செயல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தொகுதிகளை தங்களின் முந்தைய வெற்றி தோல்விகளின் அடிப்படையில் 4 நிறங்களாக திமுக பிரித்து புதிய வியூகம் வகுத்துள்ளது. அதன்படி சிவப்பு, ஆரஞ்சு, இளம் பச்சை, அடர் பச்சை என 4 நிறங்களாக தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை திமுக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள், உட்கட்சி பிரச்சனை, தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகள் சிவப்பு நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடுமையான போட்டி இருக்கும் தொகுதிகள், கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டிய தொகுதிகள் ஆரஞ்சு நிறத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வெற்றி பெரும் தொகுதிகள் இளம் பச்சை நிறத்தின் கீழும், நிச்சயம் வெற்றி பெரும் தொகுதிகள் அடர் பச்சை நிறத்தின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “ஒன் டு ஒன்” முறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 14ம் தேதி இந்த ஆலோசனை தொடங்கியது. அன்றைய தினம் சிதம்பரம், உசிலம்பட்டி, விழுப்புரம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். கடந்த 16ம் தேதி நடந்த ஆலோசனையில் பரமத்திவேலூர், பரமக்குடி, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேசிய முதலமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படவும் அறிவுரை வழங்கினார்.
தற்போது சிவப்பு நிறத்தின் கீழ் வரும் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து ஆரஞ்ச், இளம் பச்சை , அடர் பச்சை என ஆலோசனை நடக்கும் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதை அறிந்து திமுக தனது முழு பலத்தை செலுத்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுவதாக பத்திரிகையாளர் ஷபீர் அகமது கூறினார். திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளையும் கருத்தில் கொண்டு இந்த பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

Posted by - October 14, 2024 0
கனமழை எச்சரிக்கையை அடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை – திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!

Posted by - October 12, 2024 0
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில்…

தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

Posted by - October 10, 2024 0
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில்…

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

Posted by - March 5, 2024 0
தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *