45 நாட்களில் ரூ.4 கோடியை அள்ளிய ஆந்திரா தக்காளி விவசாயி

403 0

சித்தூர்:

எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி விலை, நடுக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால் இந்த ‘கிடுகிடு’ விலை உயர்வு, சில விவசாயிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் அழைத்து வந்திருக்கிறது. அவர்களை குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக்கி இருக்கிறது.Andhra Pradesh farmer earns Rs 4 crore with his tomato yield in just 45 days  | தக்காளி விற்பனை செய்து 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி

அவர்களில் ஒருவர்தான், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமவுலி. தக்காளி விவசாயியான இவருக்கு சொந்தமாக 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், ஒரு அரிய வகை தக்காளியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயிரிட்டார். விளைச்சல் விரைவாகவும், கணிசமாகவும் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசனம், மூடாக்கு போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினார். இவருடன், இவரது மனைவியும் சேர்ந்து உழைத்ததற்கு, நிலத்தின் மேல் பலன். ஜூன் மாத இறுதியில் சந்திரமவுலியின் நிலத்தில் செடிகளில் குண்டு குண்டாக தக்காளிகள் காய்த்துக் குலுங்கின.

அவற்றைப் பறித்து, அருகில் உள்ள கர்நாடக மாநிலம் கோலார் சந்தைக்கு கொண்டு சென்று விற்றார். 15 கிலோ தக்காளி அடங்கிய ஒரு பெட்டியை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்தார். இப்படி இவர் 45 நாட்களில் விற்ற தக்காளி பெட்டிகளின் எண்ணிக்கை 40 ஆயிரம்! இதன் மூலம், ரூ.4 கோடி சம்பாதித்திருக்கிறார் சந்திரமவுலி. தற்போது மகிழ்ச்சியான மனிதராக மாறியிருக்கிறார்.

குரலில் குதூகலம் தென்பட அவர் கூறும்போது, ‘தக்காளி விற்று நான் ரூ.4 கோடி ஈட்டினேன். அதில் உற்பத்தி, பறிப்பதற்கான கூலி, கமிஷன், போக்குவரத்து செலவு எல்லாம் போக எனக்கு லாபமாக ரூ.3 கோடி மிஞ்சியிருக்கிறது’ என்றார். தகுந்த விலை கிடைக்காமல் விளைபொருட்களை வீதியில் கொட்டுவது, கடன் தொல்லை தாளாமல் தற்கொலையை நாடுவது என்று விவசாயிகளைப் பற்றிய வேதனைச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்திருக்கிறோம். ஆனால் தக்காளி விலை உயர்வால் ஒரு சில விவசாயிகளாவது கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பது, குடும்பஸ்தர்களின் குமுறல்களுக்கு மத்தியிலும் சிறிது ஆறுதலையே தருகிறது.

Related Post

ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்…

Posted by - December 5, 2024 0
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா. நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

BSNL வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய IFTV திட்டம் – 600+ Live TV சேனல்கள், 75 Mbps இணைய வேகம்!

Posted by - December 15, 2025 0
BSNL (Bharat Sanchar Nigam Limited) தனது FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர்களுக்காக IFTV (Intranet Fiber TV) என்ற புதிய வசதியை அறிமுகம்…

ஏர்டெல் ரூல்ஸ்.. இனிமே ரூ.20 இல்லனா.. SIM கார்டு டீஆக்டிவ்.. 90 நாட்களுக்கு குறி.. கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா!

Posted by - February 8, 2025 0
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட்…

கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

Posted by - December 13, 2024 0
Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக…

பஞ்சாபில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.22½ லட்சம் கொள்ளை

Posted by - February 17, 2023 0
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *