5ஜி சேவையால் டேட்டா வேகமா காலியாகுதா? ஏர்டெல் வழங்கும் சூப்பர் டேட்டா வவுச்சர் பிளான்

234 0

AIRTEL:

எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதையம் யூஸர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நாட்டின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரான  ஏர்டெல் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ150-க்கும் குறைவான விலையில் OTT (ஓவர்-தி-டாப்) பெனிஃபிட்ஸ்களை அளிக்கும், ப்ரீபெய்ட் 4ஜி டேட்டா வவுச்சரை வழங்குகிறது.

இந்த பிளான் மூலம் ரூ.150-க்குள் ஏர்டெல் யூஸர்கள் ஏராளமான டேட்டாவுடன் OTT நன்மைகளையும் சேர்த்து பெறலாம்.  இவை வாடிக்கையாளர்கள் நாட்டில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் 5ஜி-யை சிறப்பாக அனுபவிக்க உதவும். ஏனென்றால் இன்னும் 5ஜி சேவைக்கென்று தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே யூஸர்கள் தங்களது 4ஜி பிளான்கள் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5ஜி-யை பயன்படுத்துகிறார்கள்.

எனினும் 4G -ஐ விட 5G அதிவேகமுடையது என்பதால் அடிப்படை 4G திட்டங்கள் பல யூஸர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே சீக்கிரம் காலியாகி விடும் டேட்டா பிரச்சனையை சமாளிக்க டேட்டா வவுச்சர் பிளான்கள் உதவுகின்றன. தற்போது நாம் இங்கே  ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.148 டேட்டா வவுச்சர் பற்றி பார்க்க போகிறோம். இந்த பிளானில் யூஸர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அக்சஸ்-உடன் கூடுதலாக 15GB ஆட்-ஆன் டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியில் பெறுகிறார்கள். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் பல பிளாட்ஃபார்ம்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் SonyLIV, LionsgatePlay, Eros Now, Hoichoi மற்றும் பல பிளாட்ஃபார்ம்கள் யூஸர்கள் 28 நாட்களுக்குத் தேர்வு செய்ய கிடைக்கும்.

எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதையம் யூஸர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ரூ.148 பிளானின் வேலிடிட்டியை பொறுத்தவரை இது யூஸர்களின் பேசிக் ப்ரீபெய்ட் பிளானை போன்றே இருக்கும். அதாவது இந்த பிளான் ஸ்டான்ட்அலோன் வேலிடிட்டியுடன் வரவில்லை.

ரூ.148-க்கு 15GB எனும்போது 1GB டேட்டாவின் விலை ரூ.9.86-ஆக இருக்கிறது.இந்த ரூ.148 பிளானை தவிர யூஸர்கள் தேர்வு செய்ய வேறு சில டேட்டா பேக்ஸ்களும் உள்ளன. ரூ.19 பிளான் 1GB டேட்டா மற்றும் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.58 பிளான் 3GB டேட்டாவுடன் யூஸரின் பேசிக் பிளான் வேலிடிட்டி வரை வரும். மிக சமீபத்தில் ஏர்டெல் ரூ.65 பிளானை அறிமுகப்படுத்தியது, இது 4GB டேட்டாவுடன் வருகிறது. இதுவும் குறிப்பிட்ட யூஸரின் பேசிக் ப்ரீபெய்ட் பிளான் வரை வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. ஏர்டெல் வழங்கும் முழு டேட்டா பேக் வவுச்சர் பற்றிய விவரங்களுக்கு ஏர்டெலின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது அல்லது ஏர்டெல் ஆப்-ற்கு யூஸர்கள் விசிட் செய்யலாம். விரைவில் புதிய ஆண்டு துவங்க உள்ளதால் நிறுவனம் மேலும் பல ரீசார்ஜ் பிளான்களை அறிமுகபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

பழைய டிவி காலி.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 40W டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

Posted by - December 11, 2024 0
பழைய டிவிய மாத்த வேண்டியதுதானு, உங்களையே சொல்ல வைக்கும்படியான பட்ஜெட்டில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி (43 inch Infinix QLED TV) ஆர்டருக்கு வந்துள்ளது.…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை

Posted by - September 8, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது…
Generated Image February 25 2026 4 32PM

நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?

Posted by - February 25, 2026 0
சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான நல்லகண்ணு இன்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் மருத்துவ படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது. Communist…

திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

Posted by - August 2, 2024 0
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *