Gpay, Phonepay பயன்படுத்துறீங்களா..? வருது புதிய கட்டுப்பாடுகள்!

450 0

இதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பி வந்த நிலையில், தற்போது பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் யுபிஐ ஆப்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையில் இந்தியாவுக்கு கனிசமான பங்கு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பரவலாக பயன்படுத்தப்பட்டஃது. கொரோனாவிற்கு பிறகான காலத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முக்கிய பங்காற்றி வருகிறது. National Payment Corporation Of India எனப்படும் என்பிசிஐ-யின் தரவுகளின படி கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

தெருவோர கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கான வசதி உள்ளது. பர்சில் காசே தேவையில்லை. யுபிஐ ஆப் இருந்தால் போதும். டீ முதல் நகை வரை எதையம் வாங்கலாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்பை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். ஆனால் அதற்கு இப்போது செக் வைத்துள்ளது என்பிசிஐ.

இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள முதல் கட்டுப்பாடு யுபிஐ ஆப்கள் வழியாக அனுப்பப்படும் தொகை தொடர்புடையது. NPCI-யின் புதிய விதிமுறையின் படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை மட்டுமே UPI ஆப்கள் வழியாக அனுப்ப முடியும். அதாவது கனரா வங்கி போன்ற சிறிய வங்கிகள் ரூ.25,000 வரை என்கிற வரம்பை நிர்ணயம் செய்துள்ளன. அதேசமயம் எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள் ஆனது தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை ரூ.1,00,000 என்று நிர்ணயம் செய்துள்ளன. இந்த வரம்பு – வங்கிக்கு வங்கி மாறுபடும் என்று அர்த்தம்.NPCI-யின் இரண்டாவது கட்டுப்பாடு ஒரு நாளைக்கு எத்தனை முறை யுபிஐ ஆப்களை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பதோடு தொடர்புடையது.  இனிமேல் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி – ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இருபது பரிமாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். இந்த வரம்பும் வங்கியின் கொள்கைகளை பொறுத்து வேறுபடலாம்.சுருக்கமாக GPay என்று அழைக்கப்படும் Google Pay ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு 1,00,000 ரூபாய் ஆகும். மேலும் இது அனைத்து UPI ஆப்கள் மற்றும் வங்கிக் கணக்குகளிலும் ஒரு நாளைக்கு மொத்தம் 10 பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்கும்.

PhonePe ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். இருப்பினும் இந்த வரம்பு உங்களுடைய வங்கிக்கு ஏற்ப மாறுபடலாம். மேலும் ஒவ்வொரு நாளும் PhonePe மூலம் அதிகபட்சமாக 10 முதல்  20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்.Paytm ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். பேடிஎம் ஆப்பின் டெய்லி லிமிட்டை பொறுத்தவரை, ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20 முறை மட்டுமே பணபரிமாற்றங்களை செய்ய முடியும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் என்பிசிஐ அறிவித்துள்ளது.

Related Post

செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…

Posted by - August 15, 2024 0
Independence Day | நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின்…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

PhonePe, அமேசான் பே இருக்கா.. அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை!

Posted by - November 25, 2024 0
இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய…

அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

Posted by - April 29, 2025 0
ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு…

ஜியோ உடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

Posted by - February 14, 2025 0
முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த வருடமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *