Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

148 0

தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196) என்று  தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அசையா சொத்து – 115 கோடி ரூபாய் (115,13,63,000) ஆகும்.

அதேபோல விஜய் மனைவி சங்கீதா பெயரில் 15,51,79,421 (15 கோடி) அசையும் சொத்தும் 2.5 கோடி ரூபாய் (2,50,00,000 ) அசையா சொத்தும் உள்ளன.

மொத்தம் ரூ.537 கோடி ரூபாய் சொத்து

இதன்மூலம் மொத்தம் ரூ.537 கோடி ரூபாய் சொத்து விஜயிடம் உள்ளதாக, தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு – 213 கோடி ரூபாய்

ஆக்ஸிஸ் வங்கி சேமிப்பு- 5.79 கோடி ரூபாய்

500 சவரன் தங்க நகைகள்

அதேபோல விஜய், சங்கீதா இருவரிடமும் மொத்தம் 500 சவரன் தங்க நகைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விஜய் வசம் – 883 கிராம் தங்கம் (110 சவரன்) உள்ளது. அதேபோல 15 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் விஜயிடம் உள்ளன. மனைவி சங்கீதாவிடம் 2 கிலோ வெள்ளி உள்ளது. மேலும் 3132 கிராம் (391 சவரன்) தங்க நகைகள் சங்கீதாவிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி சங்கீதாவிடம் ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் உள்ளதாகவும் விஜய் வேட்பு மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய் 184 கோடி சொத்துக்கு வருமான வரி கட்டி உள்ளார்.

கையிருப்பு எவ்வளவு?

விஜயின் கையில் 2 லட்சம் ரொக்கமாகக் கையிருப்பு உள்ளது.

என்னென்ன கார் வகைகள்?

தவெக தலைவர் விஜயிடம் 4 சொகுசு கார்கள் உள்ளன. ஒரு சாதாரண காரும் ஒரு எக்ஸ்எல் வாகனமும் அவர் பெயரில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ – 2 வகை கார்கள் (BMW 530, BMW I7)

டொயோட்டா லெக்சஸ் (Toyoto Lexus 350) – 1

டொயோட்டா வெல்ஃபையர் Toyoto vellfire – 1

மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) – 1

டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL SUPER) – 1.

Related Post

s 5 e1774010119419

”ஒரு கதை நியாபகம் வருகிறது’ திமுக குறித்து அதிமுக சொன்னது என்ன ?

Posted by - March 20, 2026 0
டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புலம்ப ஆரம்பித்துவிட்டதாக, அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது. ADMK Vs Stalin: காங்கிரசின் மிரட்டல்களுக்கு பணிந்தே திமுக கூடுதல் தொகுதிகளை…
download

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு

Posted by - March 27, 2026 0
திருச்சி இரண்டாவது தலைநகரமாக மாற்றும் அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல். திருச்சி: திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை 2வது தலைநகராக்கும் அல்லது துணை தலைநகராக மாற்றும்…

தேர்தலுக்கு தயாரான அதிமுக.!

Posted by - December 11, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைப்பு…
dmk cong

திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்

Posted by - May 24, 2026 0
DMK Cong: மதச்சார்பற்ற கட்சி என முகமூடியை அணிந்துகொண்டு திமுக நாடகமாடுவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் (Manickam Tagore) குற்றம்சாட்டியுள்ளார். DMK Cong: பாஜக உடன்…
Generated Image November 27 2025 10 36AM

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *