விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

178 0

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிவித்துள்ளார் .

இதுகுறித்து த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன் என புஸ்ஸி ஆனந்த் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

கிருஷ்ணாவின் போதைப்பொருள் பரிசோதனை ரிசல்ட் வெளிவந்தது, திடீர் திருப்பம்

Posted by - June 26, 2025 0
ஸ்ரீகாந்த் நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். ஆனால் இவர் போதைப் பொருள் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் கைதானார். படம்…

தமிழக முதல்வர் – ட்ரெண்டிங் ஹாஸ்டாக்குடன் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..!!

Posted by - March 1, 2024 0
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும்,தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள்…

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *