விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்

170 0

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.

பொதுவாக விஜய் படங்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு அவருடைய படம் வெளி வருகிறது. அதனாலயே கோட் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்தப் பொறுப்பை உணர்ந்து கொண்ட தயாரிப்பு தரப்பும் கணக்கு பார்க்காமல் காசை வாரி இறைத்து படத்தை முடித்துள்ளனர். மேலும் இப்போது பிரமோஷன் வேலைகளும் படுஜோராக நடந்து வருகிறது.

எங்கு திரும்பினாலும் வெங்கட் பிரபுவின் பேட்டி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அவர் படம் பற்றிய பல புது தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கோட் படம் எப்படி இருக்கிறது என UK விநியோகஸ்தர் தன் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

கோட் முதல் விமர்சனம்

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஆஹா ஓஹோ என பாராட்டிய நிலையில் 15 வயதுக்கு மேற்பட்டோர் படத்தை பார்க்கலாம் என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இருந்து பரபரப்பும் விறுவிறுப்பாக நகர்கிறது.

மூன்று மணி நேரம் படத்தின் நீளமாக இருந்தாலும் எந்த இடத்திலும் போர் அடிக்கவே இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலுடன் ஒவ்வொரு காட்சியும் நகர்கிறது. அதேபோல் விஜயின் மூன்று விதமான கெட்டப்பும் வேற லெவலில் இருக்கிறது.

மேலும் ஆக்ஷன் காட்சிகள், ஏ ஐ தொழில்நுட்பம் மற்றும் பிற டெக்னாலஜி என அனைத்தும் நிச்சயம் ரசிகர்களை கவரும். அதனால் விஜய், வெங்கட் பிரபுவின் கூட்டணி நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என விமர்சனம் வந்துள்ளது.

இதனால் தளபதியின் ரசிகர்கள் இப்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உலக அளவில் கோட் 15 கோடி வரை வசூலித்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் பிரீ பிசினஸ் போட்ட பட்ஜெட்டை தாண்டி லாபத்தை கொடுத்திருக்கிறது. இதில் சென்சார் அதிகாரிகளின் விமர்சனமும் படத்திற்கு பிரமோஷன் ஆக அமைந்துள்ளது.

Related Post

அஜித்திற்கு இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்- நடிகரின் பிளான் என்ன

Posted by - May 16, 2024 0
நடிகர் அஜித் நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு…

விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி- அட சூப்பரு

Posted by - December 20, 2023 0
விஜய்யின் 68 லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் இப்போது வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். விஜய்யின் இந்த 68வது படத்தின் படப்பிடிப்பு…

ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

Posted by - April 15, 2023 0
ருத்ரன் திரைப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன். திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக…

தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்!

Posted by - October 17, 2024 0
எச்.வினோத் இயக்கி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69ல் விஜயின் கதாபாத்திரம் இதுதான் என்ற தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது நடிகர் விஜய்யின் கடைசி படத்தில்…

தயாரிப்பாளருக்கு கை நிறைய அள்ளி கொடுத்ததா குபேரா.?

Posted by - June 21, 2025 0
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று குபேரா வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்களும் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்துள்ளார். அவருடைய நடிப்பு வழக்கம் போல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *