தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்!

179 0

எச்.வினோத் இயக்கி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69ல் விஜயின் கதாபாத்திரம் இதுதான் என்ற தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது

நடிகர் விஜய்யின் கடைசி படத்தில் அவர் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவை விட்டு முற்றிலுமாக விளக்கவுள்ளார். இதையடுத்து சினிமாவில் விஜய் கடைசியாக நடிக்கும் படம் ‘தளபதி 69’படத்தை எச்.வினோத் இயக்குகிறார். சில நாட்களுக்கு முன் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் பூஜையும், விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாட்டு பூமி பூஜையும் ஒரே நாள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் , அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் படத்திற்கு பூஜை போடப்பட்டு படம் தொடர்பான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதன்படி, தளபதி 69 படத்தில் காவல்துறை முன்னாள் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. பாபி தியோல், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள இப்படம் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெறி படத்திலும் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடிகர் விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஒரு வழியாக ஜான் வரப்போறார்.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - September 23, 2023 0
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன்…

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

Posted by - January 29, 2025 0
தான் இயக்கிய படத்தை பார்க்க சென்ற சேரன், ரசிகர்கள் விமர்சனம் கொடுத்ததை கேட்டு கதறி அழுத சம்பவம் பற்றி பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்…

ரஜினியின் ஜெயிலர் பட கலெக்ஷனுக்கு நடுவில் வந்த விஜய்யின் லியோ பட தகவல்- இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா?

Posted by - August 12, 2023 0
விஜய்யின் லியோ நடிகர் விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் வாரிசு, படம் ஹிட்டடிக்கும் என்று பார்த்தால் சொதப்பியது. அடுத்து அவர் யாருடன் கூட்டணி அமைப்பார்…

தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் துவக்கம்..!!

Posted by - March 20, 2024 0
தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ‛அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இசை உலகின்…

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - July 31, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *