பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

147 0

அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறி, இளைஞர் ஒருவர் கொலை செய்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. 26 வயதான இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான மதன்குமாரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மதன்குமார் பத்தாம் வகுப்பு படித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது தங்கை திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பிய நிலையில், தற்போது மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரை சந்தித்துப் பெண் கேட்டுள்ளனர். அப்போது ரமணியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த ஒரு மாதமாக ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளனர். ரமணியும் மதன்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். ரமணியின் உறவினர் ஒருவர், மதன்குமாரின் பழக்கவழக்கம் சரியில்லை என ரமணியின் பெற்றோரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரமணியிடம், மதன்குமார் நேற்று முன் தினம் மாலை திருமணம் தொடர்பாகப் பேசியுள்ளார். அப்போது ரமணி, மதன்குமாரைத் திட்டி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் நேற்று காலை ரமணி பணிபுரியும் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் ஓய்வறையில் இருந்த ரமணியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறித் தகராறு செய்துள்ளார்.

அப்போது மதன்குமார் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியால் ரமணியின் கழுத்தில் குத்தி விட்டுத் தப்பியோட முயன்றார். அவரை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே ஆசிரியை ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த பள்ளியில் டிஐஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.ஏற்கனவே தெரிந்த நபர் என்பதால் யாரையும் கேட்காமல் நேராக ஓய்வறைக்குச் சென்ற மதன், ஆசிரியையைக் கொன்றதாக ஜியாவுல் ஹக் தெரிவித்தார். மதன் பள்ளிக்கு வந்தபோது காவலாளி இல்லை எனவும் ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.

Related Post

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்

Posted by - April 24, 2024 0
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

சென்னையில் 4 லட்சம் பேருக்கு உணவு வினியோகம் தொடருகிறது: மாநகராட்சி ஆணையர் தகவல்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி…

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

Posted by - July 13, 2024 0
 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

Posted by - May 4, 2023 0
காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்காக முன்வைக்கப்படும் அரசியல் முழக்கமே திராவிட மாடல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கமளித்து ஆங்கில நாளிதலுக்கு தமிழக…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

Posted by - September 13, 2023 0
உடுமலை: நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *