தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

209 0

காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்காக முன்வைக்கப்படும் அரசியல் முழக்கமே திராவிட மாடல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கமளித்து ஆங்கில நாளிதலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்துள்ளார்.

திமுக அரசு உடனான அனுபவம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், கோவை கார் குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே, பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்ததாகவும், தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று எப்படி கூற முடியும் என்றும் வினவியுள்ளார்.மேலும், திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் வாசகம். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடல் என்ற முழக்கம் என்றும் கூறியுள்ளார்.

இதன்காரணமாகவே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை நீக்கிவிட்டு வாசித்ததாகக் கூறினார். தனது உரைக்கு பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா உள்ளதாகவும், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பதால், அந்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் மாளிகையில் நிதி செலவினங்களில் விதிமீறல் இல்லை என்றும், முதலமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதையை வைத்துள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்ரவி கூறியுள்ளார்.

Related Post

இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Posted by - January 27, 2024 0
சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

Posted by - November 30, 2023 0
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

Posted by - December 2, 2023 0
சென்னை: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

Posted by - September 8, 2023 0
புதுச்சேரி: வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *