அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

220 0

ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி உள்ளோம். ஆனால் அதை தயாரிப்பது யார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

அனைவருக்கும் தங்களின் குழந்தைப் பருவம் மறக்க முடியாத ஒன்று. பள்ளிக்கூடம், நண்பர்கள், விளையாட்டு, புத்தகங்கள், பென்சில்கள், டிபன் பாக்ஸ் என்று அனைத்துமே நமக்கு இனிமையான நினைவுகளை தரும். அதேபோல் சாக்பீஸில் எழுத தொடங்கிய நாம், அடுத்ததாக பென்சிலில் எழுத தொடங்கினோம். சிறுவயதில் பென்சில் பயன்படுத்தாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். மேலும், பென்சில் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அப்சரா அல்லது நடராஜ் பென்சில்கள் தான். இந்த பென்சில்கள் தொடர்பான ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக பள்ளிக் குழந்தைகள் முதலில் பென்சிலில் எழுதக் கற்றுக் கொள்கிறார்கள். அதனை தொடர்ந்து பேனாவில் எழுதுகிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பென்சிலை பயன்படுத்துகின்றனர். ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.நம் நாட்டில் பல பிரபலமான பிராண்டுகளின் பென்சில்கள் உள்ளன. ஒவ்வொரு மாணவரும் சிறுவயதிலிருந்தே நூற்றுக்கணக்கான பென்சில்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பென்சில்களை தயாரிப்பது யார்? என்று யோசித்திருக்க மாட்டோம். ஆனால், அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்கள் இரண்டுமே ஒரே நிறுவனத்தை சேர்ந்தவை என்பது உங்களுக்கு தெரியுமா?. முதலில் நடராஜ் பென்சிலை தான் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அப்சரா பென்சில் விற்பனைக்கு வந்தது. அதை தொடர்ந்து நடராஜை விட அப்சரா பென்சிலின் விற்பனை அதிகரித்தது.விலையை பொறுத்தவரை, நடராஜ் பென்சிலை விட அப்சரா பென்சில் அதிகமாக இருந்தாலும், அப்சரா பென்சிலே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு பென்சில்களும் ஹிந்துஸ்தான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், தரத்தில் சிறிய வித்தியாசம் இருப்பதால், அனைவரும் அப்சரா பென்சிலை வாங்குகின்றனர்.

Related Post

அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

Posted by - May 26, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனந்தி மற்றும்…

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Posted by - April 10, 2024 0
செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில்…

பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

Posted by - July 19, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. சமையல் ப்ளஸ் காமெடி கலாட்டா என இருக்கும்…

நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு காரணம் யார்-சரத்குமார் சொல்கிறார்…

Posted by - January 30, 2024 0
நடிகை கனகா தமிழ் சினிமாவில் 80, 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள்…

மனைவி தங்கள் கணவனிடம் ஒருபோதும் பேசக்கூடாத விஷயங்கள்..

Posted by - December 17, 2025 0
கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, சிறிய விஷயங்களைப் பெரிதாக்காமல் முன்னேறினால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.அன்பு, நம்பிக்கை, மரியாதை ஆகியவை வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு மூன்று முக்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *