”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

275 0

#kadavulae #Ajithae : என்னை ”கடவுளே அஜித்தே” என கூப்பிடுவது ,என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்

கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க என்றும் யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்க குடும்பத்தை கவனியுங்கள் என்றும் நடிகரும் கார் ரேசருமான அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”கடவுளே அஜித்தேனு” – அழைக்காதிங்க:

நடிகர் அஜித்தை, அவரது ரசிகர்கள் தல என்று அழைத்து வந்தனர். இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு அஜித் தெரிவித்ததாவது , “ தல என்று அழைக்க வேண்டாம் , என்னை அஜித் அல்லது Ak என அழையுங்கள் என கூறினார்.

இந்நிலையில், சமீப காலமாக அவரது ரசிகர்கள் கடவுளே என அழைக்க அழைக்க ஆரம்பித்தனர். மேலும், பொது இடங்களில் கூட, கடவுளே அஜித்தே என்று கோசங்களும் எழுப்ப ஆரம்பித்தனர். இது பெரும் புழக்கத்துக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்த தருணத்தில் , கடவுளே அஜித்தே என அழைக்க வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் தெரிவித்ததாவது, “ 

சமீபகாலமாக, முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் கூட அஜித்தே ‘என்ற இந்த கோஷம் என்னைக் கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில், நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்

எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும், இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்

யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! “ என நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

Related Post

கர்ப்பிணி மனைவியை சரமாரி துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபர்- வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது

Posted by - November 16, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில்…

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted by - July 20, 2023 0
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும்…

”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு

Posted by - August 15, 2025 0
ஜிஎஸ்டி வரி குறைப்புக்கான நேரம் வந்துவிட்டதாகவும், இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாற்றம் சிறு, குறு தொழில்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரும் பலன் அளிக்கும் என்றார்…

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Posted by - July 11, 2023 0
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம்…

ஜியோ உடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

Posted by - February 14, 2025 0
முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த வருடமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *