மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

205 0

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து மவுனம் சாதித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது. இச்சம்பத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என் டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Related Post

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Posted by - July 11, 2023 0
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம்…

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *