காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

215 0

காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்து வந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் விரைந்து குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,

பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ்  இளங்கோவன், ஆக்டிவாக செயல்பட்டபோது தமிழக அரசியலில் தீவிரமாக களமாடினார். அவரது அனல் பறக்கும் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக மீண்டும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் உயிரிழந்ததால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  போட்டியிட்டு எம்.எல்.ஏ-ஆன ஈவிகேஸ் இளங்கோவனின் உடல்நிலையும் மோசமடைந்து இருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?

ஈவிகேஎஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஈரோட்டில் பிறந்த இவர், சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வகித்துள்ளார். 1984,1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், 1996ல் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

ஈவிகேஎஸ்  இளங்கோவனின் முதல் வெற்றி:

004 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு (214477) வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வானார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்றார்.

இருப்பினும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். கூட்டணியில் இருந்த திமுக உடன் இணக்கமான உறவை கொண்டிருக்காததே அவரது தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. தொடர்ந்து,  2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியையே தழுவினார்.

மகன் இடத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதன் பிறகு 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இதையடுத்து காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் களமிறங்கி அபார வெற்றி பெற்றார்.

Related Post

இது கூட தெரியாம இருக்கீங்க.. CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்.. வெளுத்து வாங்கிய மக்கள்

Posted by - March 12, 2024 0
விஜய் நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் தான்,…

ஒடிசா ரெயில் விபத்து: மாயமான என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல்வைப்பு

Posted by - June 20, 2023 0
கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின.…

அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்.. திறமையை பாராட்டிய தலைமை.. தேசிய அளவில் பொறுப்பு…

Posted by - April 11, 2025 0
பாஜக தமிழ்நாடு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு கிடைக்க உள்ளது. அவரது திறமையை பாராட்டியுள்ள தலைமை, இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாஜக தமிழ்நாடு…

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

Posted by - June 18, 2025 0
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர். தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *