பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்.. பாலாவை நெகிழ வைத்த சூர்யா

247 0

நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சியும் வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சூர்யா சிவக்குமார் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஏனென்றால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். பாதி சூட்டிங் முடிந்த நிலையில் சிறு மனகசப்பின் காரணமாக இந்த கூட்டணி பிரிந்தது.

பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்

அந்த சமயத்தில் பாலா சூர்யாவை எந்த அளவுக்கு கொடுமை செய்தார் என பல செய்திகள் வெளியானது. ஆனால் இரு தரப்பும் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கவில்லை.

அவை அனைத்துக்கும் சேர்த்து தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் சூர்யா பாலா இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு மேடை ஏறினார்கள்.

இதுவே அவர்களுக்குள் இருக்கும் பாசத்தை பறைசாற்றியது. அதேபோல் சூர்யா பேசும் போது நந்தா படம் இல்லை என்றால் காக்க காக்க வாரணம் ஆயிரம் என எதுவும் கிடையாது.

பாலா தான் தனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்ததாக வெளிப்படையாக பேசினார். இவ்வளவு உயரத்திற்கு வந்த பிறகும் கூட அவர் பழசை மறக்கவில்லை.

நன்றி மறக்காமல் அவர் பேசிய பேச்சும் மனக்கசப்பை மறந்து விழாவுக்கு வந்ததும் பாராட்டப்பட வேண்டியது தான். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பாலா ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ச்சியுடன் இருந்தார்.

Related Post

அஜித் ஒரு Fraud, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. கொந்தளித்து பேசிய தயாரிப்பாளர்

Posted by - June 30, 2023 0
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரை பற்றி பிரபல தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கம் என்பவர் கொந்தளித்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில்,…

வாரிசு படத்தின் கதை இதுதானா.. அப்போ படம் வெற்றியா? தோல்வியா?

Posted by - December 18, 2022 0
வாரிசு விஜய்யின் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.  …

தமிழனா பொறந்தது தப்பா…? – மொழி சர்ச்சையை பேசும் ரெபல்

Posted by - March 12, 2024 0
கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில்…

Kottukkaali Movie Review: ஆக்ரோஷமா? அமைதியா? – கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் இதோ!

Posted by - August 23, 2024 0
உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி…

டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்

Posted by - September 8, 2023 0
மாரிமுத்து எதிர்நீச்சல் வில்லன் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார். இறுதி நிமிடம் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *