புத்தாண்டு கொண்டாட்டமாக சேனல்கள் களமிறக்கும் புது படங்கள்.. கில்லி போல் தட்டி தூக்கிய விஜய் டிவி

119 0

விழாக்காலம் என்றாலே கொண்டாட்டத்தோடு சேர்த்து டிவி சேனல்களில் என்ன புது படம் போடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து விடும்.

இதை நிஜமாகவே அதிக சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடைசி தலைமுறை 90ஸ் கிட்ஸ்கள் என்று கூட சொல்லலாம்.

இப்போதைக்கு பார்த்த படத்தை மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்போம் நல்ல வாய்ப்பாக சேனல்களில் போடும் படங்கள் ஆகிவிட்டது.

அப்படி வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை எந்தெந்த சேனல்களில் என்ன புது படங்கள் போடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

சேனல்கள் களமிறக்கும் புது படங்கள்

விஜய் டிவி: புத்தாண்டு கொண்டாட்டமாக விஜய் டிவி கில்லி போல் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இறக்கி இருக்கிறது.

காலை 11:30 மணிக்கு ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் மற்றும் மதியம் 3 மணிக்கு மகாராஜா படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜீ தமிழ்: ஜீ தமிழ் சேனலில் மூன்று படங்களை போட இருக்கிறார்கள். காலை 8 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

11.30 மணிக்கு அயலி படமும் மதியம் மூன்று மணிக்கு ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

கலைஞர் டிவி: கலைஞர் டிவியில் இன்று இரவு பத்து மணிக்கு விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

நாளை காலை 10 மணிக்கு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் பிடி சார் படமும் மதியம் மூன்று மணிக்கு ஜெய் பீம் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

சன் டிவி: சன் டிவி சேனல் இந்த முறை புத்தாண்டுக்கு புதிய படங்கள் எதையும் ஒளிபரப்பவில்லை. காலை 11 மணிக்கு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சர்க்கார் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதேபோன்று மதியம் இரண்டரை மணிக்கு ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பேட்ட படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

Related Post

CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்…

Posted by - June 10, 2025 0
 முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க…

15 இடங்களில் சதமடித்தது… மக்கள் கடும் அவதி…!

Posted by - May 18, 2023 0
சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர்…

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 21, 2023 0
சென்னை: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.…

குளிர்காலத்துல மாரடைப்பு வர அதிக வாய்பிருக்காம்… அவை வராமல் தடுக்க ‘நீங்க’ என்ன செய்யணும் தெரியுமா?

Posted by - December 5, 2023 0
குளிர்காலம் சுற்றுப்புறத்தை உறைபனியின் அமைதியான அடுக்கில் மூடுவதுடன், உங்கள் உடலுக்கு பல சாவல்களை வழங்குகிறது. குறிப்பாக இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம்…

‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - May 16, 2023 0
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *