தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் புதுவருடத்தை தாய்லாந்தில் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கீர்த்தி சுரேஷ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற தவறிவிட்டது. அத்தபின்னர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆஹா ஓஹோவென ஹிட்டானது. முதல் படத்தில் துவண்டுபோன கீர்த்திக்கு இப்படம் செம கம் போக்காக அமைந்தது. ரஜினி முருகன் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி பிரபலமாக, இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து கீர்த்திக்கு பல படங்கள் வரிசைக்கட்டி நின்றன. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார். இப்படியாக தமிழில் கலக்கிய கீர்த்தியின் பார்வை தெலுங்கு சினிமா பக்கமும் திரும்பியது.நீனு லோக்கல் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார். தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்த கீர்த்திக்கு ‘மகாநடி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை புரிந்துகொண்ட தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களிலே மட்டுமே நடித்து வருகிறார்.கீர்த்தி சமீபத்தில் தனது பால்ய நண்பர் மற்றும் காதலரான ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். அவருடன் தாய்லாந்தில் புது வருடத்தை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு காய்ச்சல் வந்ததாகவும் தெர்மாமீட்டரை வாயில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Related Post
தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். சமந்தா நடிப்பில்…
இணையத்தில் லீக்கான LEO HD.!அதிர்ச்சியில் படக்குழு..
கடந்த மாதம் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் லியோ….தளபதி விஜய்யின் புதிய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்…படம் மிக…
லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்
லியோ விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்…
ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்
ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின்…
ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி திடீர் விலகல் – விளக்கத்தில் உருக்கம்
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (255)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (84)
Recent Posts
- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

- நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

- “தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

- திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
