ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்

211 0

ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின் அசத்தலான நடிப்பில் உருவான திரைப்படம் கோ . கடந்த 2011 ஆம் ஆண்டும் இப்படத்தில் கார்த்திகா, அஜ்மல், பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், போஸ் வெங்கட், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்ட்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

மிக குறுகிய பட்ஜெட்டில் அரசியல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது .

அதன்படி இப்படம் மார்ச் 1, 2024 அன்று தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .இப்படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் தற்போது அவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான கோ படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…

”கண்ணை நம்பாதே” திரை பார்வை..

Posted by - March 18, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மு. மாறன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. திரில்லர் கதைக்களத்தில் உதயநிதி எப்படி நடித்துள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தின்…

ரசிகர்களுக்கு செம ட்ரீட்… வெளியானது AK62 டைட்டில்…

Posted by - May 1, 2023 0
அஜித் குமாரின் 62-வது படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.…

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

Posted by - August 12, 2023 0
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்…

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்! எந்த ஹீரோ முதலிடம் பாருங்க.

Posted by - November 23, 2022 0
சினிமாவில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் தற்போது ஹிந்தி சினிமா ஹீரோக்கள் ஆதிக்கம் குறைந்து தற்போது தென்னிந்திய நடிகர்கள் தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *