கருணை இருக்கு…நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்…

183 0

பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்காததற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் கருணை இருக்கு ஆனா நிதி இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியது. அதனுடன் பரிசுப் பணம் வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பொங்கல் பரிசுப் பணம்… எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

2025 பொங்கல் பண்டிகைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் அரசு வாங்கவில்லை எனவும், தங்கள் ஆட்சியில் 2,500 ரூபாய் வழங்கப்பட்டபோது, அதை 5,000 ரூபாயாக வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியதாகவும், ஆனால், தற்போது 1,000 ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் அதிமுக குற்றம்சாட்டியது.  பொங்கல் பரிசுப் பணம் வழங்காததற்கு, திமுக கூட்டணி கட்சிகளே சில அதிருப்தி தெரிவித்தன.

பொங்கல் பரிசுப் பணம்… நிதி அமைச்சர் விளக்கம்

இவ்வாறு, பொங்கல் பரிசுப் பணம் வழங்காததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் பொங்கல் பரிசுப் பணம் வழங்க போதிய நிதி இல்லை என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். குறிப்பாக இந்த ஆண்டு, நிதி நெருக்கடி உள்ளதாலேயே, பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்க முடியவில்லை என அவர் கூறிய அவர், மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியை சரிவர வழங்காததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பேரிட நிவாரண நிதி, கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவற்றை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாகவும், அதனால் தமிழ்நாடு அரசிடம், பொங்கலுக்கு ரொக்கம் வழங்கும் அளவிற்கு நிதி இல்லை என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.

கருணை இருக்கு… ஆனா நிதி இல்லை – ஸ்டாலின்

இந்த நிலையில், இன்று(11.01.2025) சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொங்கல் ரொக்கப் பரிசு வழங்காதது குறித்து விளக்கமளித்தார். அப்போது, அரசிடம் கருணை இருக்கிறது, ஆனால் நிதி இல்லை என தெரிவித்தார். அரசின் வருவாய் அதிகரித்துள்ள போதிலும், திமுக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், மற்ற செலவுகளுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் பல திட்டங்களுக்கு அதிகமான பங்கு நிதியை தமிழ்நாடு அரசே வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

Related Post

தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

Posted by - November 2, 2023 0
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும்…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

என்.எல்.சி. அனல்மின் நிலையத்தால் கடலூர் கிராமங்களில் சுகாதார சீர்கேடு- ஆய்வுஅறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Posted by - August 9, 2023 0
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.…

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

பொங்கல் பரிசு ரூ.1000… ரேஷன் கடைகளில் வழங்கும் தேதி அறிவிப்பு

Posted by - December 23, 2022 0
Ponga Gift | பொங்கல் தொகுப்பு உடன் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *