விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

283 0

மொடக்குறிச்சி:

தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பாண்டி (50) என்பவர் அறிமுகமானார். இவர் சிவாஜியிடம் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ஒருவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அவர் 50 லட்சம் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவார் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய சிவாஜி 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் தனக்கு கமிஷனாக ரூ.15 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.35 லட்சத்தை எடுத்து வந்தார்.நிதி நிறுவனம் நடத்தி கூடுதல் வட்டி தருவதாக மோசடி செய்த கும்பல் | complaint  against Fraud gang in police

பணத்தை கொண்டு வந்த சிவாஜியிடம் பாண்டி ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து ஈரோட்டில் உள்ள ராஜ்குமார் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளார். அதன்படி சிவாஜியும் ராஜ்குமாரிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ராஜ்குமார் பணத்தை ஈரோட்டுக்கு கொண்டு வரும்படி கூறி உள்ளார்.

இதையடுத்து சிவாஜி ஒரு பேக்கில் ரூ.35 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதிக்கு வந்தார். மேலும் அவர் தன்னுடன் செந்தில், மாதேஸ்குமார் ஆகியோரை அழைத்து வந்தார். காரை குபேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். சின்னமனூரில் காலை 6 மணிக்கு பணத்துடன் புறப்பட்ட இவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறை நால்ரோட்டிற்கு மதியம் 1.30 மணி அளவில் வந்தனர்.

பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் ராஜ்குமார் என்பவர் 2 நபர்களுடன் காரில் டீக்கடைக்கு வந்தார். அவர் சிவாஜியை சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.50 லட்சம் தனது காரில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் சிவாஜி, செந்தில் ஆகியோரை ரூ.35 லட்சம் பணத்துடன் தனது காருக்கு அழைத்து சென்றார். பின்னர் பணத்தை எண்ணி சரிபார்க்கலாம் என்று கூறி பரிசல்துறை நால் ரோட்டில் இருந்து திண்டல் ரிங் ரோட்டில் அழைத்து சென்றனர். அப்போது இவர்கள் சென்ற காரை எதிரே வந்த ஒரு கார் வழி மறித்து நிறுத்தியது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் நாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பின்னர் அவர்கள் காரில் இருந்து சிவாஜி, செந்தில் ஆகியோரை கீழே இறங்க சொன்னார்கள். அவர்களும் காரில் இருந்து இறங்கி னார்கள். பின்னர் காரில் இருந்த ரூ.35 லட்சத்துடன் 2 கார்களும் பெருந்துறை நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவாஜி ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்த பாண்டியை தேடி சிவாஜி உசிலம்பட்டி சென்றார். அப்போது பாண்டியும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 6, 2023 0
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு…

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Posted by - October 9, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில்…

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது

Posted by - December 31, 2024 0
தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் தனுஷ் இதில் இவர் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நித்யா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *