நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

195 0

சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

சஞ்சய் ராய் குற்றவாளி

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது.

விசாரணையில் சஞ்சய் ராய் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக சஞ்சய் ராய் மீது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மொத்த விசாரணையும் மூடிய அறைக்குள் கேமரா பதிவுடன் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், சிபிஐ, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், ஊழியர்கள் என 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டன. கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Post

2018-ல் இருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்: மத்திய அரசு தகவல்

Posted by - December 8, 2023 0
இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் படித்து வருகிறார்களா? என்பது தெரிய…

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Posted by - February 20, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில்…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு திருமணம் செய்துவைத்த மகள்

Posted by - October 24, 2023 0
திருவனந்தபுரம்: திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கக்கூடிய ஒன்று. தான் கரம் பிடிக்கும் வாழ்க்கை துணையுடன் இறுதிவரை ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *