இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

166 0

கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கள் போதைப் பொருள் அல்ல.

தஞ்சாவூர்: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, கள் தடை நியாயமானது தான் எனக்கூறி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறதா? இது எங்களின் சவாலாகும் என்று தஞ்சாவூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூருக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கள் போதைப் பொருள் அல்ல.

கள் போதை என நிரூபிக்க முடியுமா என்ற சவாலை ஏற்று முன்னாள் முதல்வர்கள் கூட எங்களோடு வாதிட முன்விரவில்லை. கடந்த ஜன.21ம் தேதி விழுப்புரத்தில் நடந்த கள் விடுதலை மாநாட்டில் சீமானுக்கு கள் வழங்கப்பட்டது. அது போல வரும் மார்ச் மாதம் கள் விடுதலை கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில், கலந்துக்கொள்ளும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட விருந்தினர்களுக்கு கள் வழங்க உள்ளோம். தமிழக அரசே முன்னின்று மக்களுக்கு மதுவை டாஸ்மாக் மூலம் வழங்கி வருகிறது.

கள்ளச்சாராய சாவுகள் ஏற்படும்போது, மக்களுக்கு மாற்றாக கள்ளை முன்நிறுத்துவது புரிதலின்மையின் வெளிப்பாடு. கள் மதுவும் அல்ல; மதுவுக்கு மாற்றும் அல்ல. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, கள் தடை நியாயமானது தான் எனக்கூறி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறதா?  இது எங்களின் சவாலாகும்.

நீரா இறக்கி சந்தைப்படுத்தும் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால் நிபந்தனைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். விவசாயிகள் விருப்பம் போல் நீராவாகவோ, பதநீராகவோ, கள்ளாகவோ இறக்கியும், குடித்தும், விற்றும் கொள்ளலாம். அரசின் தலையீடும், குறுக்கீடும் இதில் இருக்காது. மதிப்புக்கூட்டப்பட்ட பண்டமாக மாற்றி உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தி கொள்ளலாம். கலப்படம் இருந்தால் கடுமையான தண்டனை இருக்கும் என அரசு அறிவித்தால் நீரா திட்டம் வெற்றி அடையும். எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு வருமானால் அதை கள் இயக்கம் முன்னின்று முறியடிக்கும். இந்த அறிவிப்பு வெளியானால் 2026 தேர்தலில் ஆளும்கட்சி அதிகாரத்தை தக்க வைக்க உதவும். ஆளும் தரப்பு தவறும் பட்சத்தில் எதிர் தரப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றால் அவர்கள் ஆட்சியை பிடிக்க வழிவகுக்கும். இவ்வாறு ஒரு அறிவிப்பு வந்தால் விவசாயிகள் மத்தியில் அரசிற்கு நன்மதிப்பை பெற்று தரும்.

அரசு ஊழியர்களுக்கு ஊதியக் குழு உள்ளது போன்று விவசாயிகளுக்கும் விவசாய கமிஷனை அமைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். பட்டறிவு அடிப்படையில் விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும்.

மேட்டூர் அணை 2024ம் ஆண்டில் 3 முறை நிரம்பினாலும், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 2018ல் உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டின்படி அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்திவிட முடியாது. 28 ஆண்டுகால சட்டப்போராட்டத்தால் தமிழ்நாட்டை கர்நாடகா காவிரியின் வடிகாலாக ஆக்கியுள்ளது. கர்நாடகா அணைகளின் பாதுகாப்பை கருதியே தமிழ்நாட்டை காவிரியின் வடிகாலாக வைத்து உபரிநீரை திறந்துள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக நாள்தோறும் நீர்ப்பங்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் எஸ். பாலு தீட்சிதர், தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க கரூர் மாவட்டத் தலைவர் கொங்கு கே. முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Post

அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

Posted by - December 18, 2024 0
அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை…

காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்

Posted by - July 10, 2023 0
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி…

வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

Posted by - March 16, 2023 0
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,…

எம்.ஜி.ஆர்., ஆக முயன்று தோற்ற மு.க. முத்து – தந்தை கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. ஜெ., உதவி

Posted by - July 19, 2025 0
மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி. ஆரை போலவே திரைப்படங்களில் நடித்து பிரபலமாக முயன்று மு.க. முத்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *