தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?

309 0

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில், என்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம்:

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி ஓராண்டு முடிவடைந்த நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதோடு, மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, தமிழக அரசியலில் தனக்கான இடத்தை வலுவாக பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த நிலையில், இரண்டாமாண்டு தொடக்க விழா எளிமையாக அண்மையில் சென்னையில் நடந்தது. இந்நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

பொதுக்குழு கூட்டம் எங்கு? எப்போது?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் பொதுக்குழுவில் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். தவெகவில் இருந்து 2,150 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலை 7.30 மணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூத் கமிட்டி மாநாடு எப்போது?

கூட்டத்தின் முடிவில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மாநிலம் முழுவதும் விஜய் பயணம் மேற்கொள்வது குறித்தும், கட்சியின் பூத் கமிட்டி மாநாடு எங்கு? எப்போது? நடைபெறும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாமாண்டு தொடக்க நிகழ்ச்சியில் பேசிய விஜய் பூத் கமிட்டியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு கட்சிக்கு 69 பூத் கமிட்டி தேவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்மானங்கள் என்ன?

சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இந்தி திணிப்பு விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, அரசு ஊழியர்கள் போராட்டம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பொதுமக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி போராடுவது போன்ற களப்பணிகளிலும் தவெக தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தவெகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்தும், தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு ஏற்பாடு?

பொதுக்குழுவிற்கான பணிகளை மேற்கொள்ள வரவேற்பு, மேலாண்மை, தொழில்நுட்ப குழு உள்ளிட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ள பொதுக்குழுவில், பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக தலை வாழை இலையில் விருந்தளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Post

கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

Posted by - December 3, 2022 0
ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவண்ணாமலை…

அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

Posted by - January 8, 2024 0
சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா? அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த…

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் – ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள தொடர்ந்து pixeltamil.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள். Tamil Nadu Budget 2025 LIVE Updates: ரமேஸ்வரத்தில் புதிய…

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *