அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

179 0

சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதில் 8.4 சதவீதம் புரதச் சத்து, 1.4 சதவீதம் கொழுப்புச் சத்து, 3.1 சதவீதம் தாது உப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

அகத்தி கீரை இரு வகைப்படும். ஒன்று வெள்ளை நிற அகத்தி கீரை. இது வெள்ளை பூக்களை கொண்டது. அது போல் சிகப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி கீரை. இவை இரண்டுமே மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன்  மட்டும் சாப்பிடாதீர்கள்! | Do you know the benefits of Agathi Keerai? -  Tamil Oneindia

அகத்தி கீரை உணவை எளிதில் ஜீரணமாக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும். உடலின் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சியாகும். அல்சர் உள்ளிட்ட வயிற்றுப்புண் குணமாகும். இந்த அகத்திக் கீரையை சேற்றுப்புண்களில் தடவினால் அது விரைவில் குணமாகும். தேமல் வந்த இடத்தில் கீரையை தடவினாலும் குணமாகும். இந்த கீரையின் சாற்றுடன் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது பூசினால் அவை பூப்போல் உதிர்ந்துவிடும். தலைச்சுற்றல், கண் எரிச்சல், போன்ற பிரச்சினைகள் குணமாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த அகத்திக் கீரை பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள விஷம் வெளியேறும்.

இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும். விஷம் குடித்தவர்கள் அகத்திப்பட்டை கசாயத்தை 50 கிராம் எடுத்துக் கொண்டு 8 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் அந்த விஷமே முறிந்துவிடும். உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும். ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலையும் நீக்கும்.

சித்த மருத்துவம் சாப்பிடுவோர் இந்த கீரையை எடுத்துக் கொள்ளக் கூடாது. ரியாக்ஷன் அதிகமாகி சிரங்கு ஏற்படும். அகத்திக் கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. மது அருந்தியவர்களும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. மது அருந்திவிட்டு இந்த கீரையை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்.

நுரையீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், சருமத்திற்கு சிறந்தது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், சைனஸை குணப்படுத்தும். ரத்த கொதிப்பு, கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கும். மலமிலக்கியாக செயல்படுகிறது. வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை அழிக்கிறது. பித்தத்தை சமன் செய்துவிடுகிறது. குடல் புண், தொண்டை வலி, தொண்டை புண்ணை நீக்கும்.

Related Post

உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?

Posted by - February 19, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபநாட்களாக பொதுமக்களுக்கு இருமல்,…

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

உஷார்… டெங்கு காய்ச்சலின் இந்த 4 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

Posted by - September 14, 2023 0
டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே…

வானிலை அலெர்ட்…!

Posted by - May 10, 2023 0
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை 5.30 அளவில் காற்றழுத்த தாழ்வு…

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *