இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்..பலர் மயக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த விளக்கம்.

213 0

சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடிய விடிய முழக்கமிட்ட ஆசிரியர்களில் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊதியம் தொடர்பாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருக்கிறது என்பது இடைநிலை ஆசிரியர்களின் புகாராகும். ஒரே பதவி, பணி, கல்வித்தகுதி என அனைத்தும் இருந்தும், இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது.

இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி கடந்த 2016ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 7வது ஊதியக் குழுவில் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை. எனவே, 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை அடிப்படை கல்வி கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறி தொடர் போராட்டத்தை அறிவித்தனர். கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அப்போதய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பது இடைநிலை ஆசிரியர்களின் புகாராகும். இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில், 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விடிய விடிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊதியம் தொடர்பாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அது போல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையும், அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.Tamil Nadu Sececondry grade school teachers Hold Hunger Strike at DPI Explained by Anbil Mahesh

கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என தெரிவித்தார். மேலும் மரத்தடி கீழ் அமர்ந்து படித்துவரும் பள்ளிக்கூடங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுபடி வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் திருக்குறள் அதிகமாக இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

Related Post

ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

Posted by - November 26, 2024 0
தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார். முன்னாள்…

முதலில் வந்தது கோழியா…? முட்டையா..? பல ஆண்டு கால புதிருக்கு விடை தேடி கொடுத்த விஞ்ஞானிகள்

Posted by - June 16, 2023 0
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா… சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது. சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான…

போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

Posted by - February 22, 2025 0
சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. திமுக கட்சியினருக்கு…

மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் – வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!

Posted by - May 7, 2024 0
போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறைக்கு வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பாஜக…

நாளைமறுநாள் வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - January 8, 2024 0
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *