ஆட்சி மாற்றம் ஏற்படும்… தங்கம் விலை உச்சத்தை தொடும்… புதிய நோய் பரவும்… பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்,….

117 0

மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும்.

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் குருக்கள் சிவமணி, 2025 ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2026 ஏப்ரல் 13-ந்தேதி வரை பஞ்சாங்கத்தின் முக்கிய தகவல்கள் குறித்து வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும்.

தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும். மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.

ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும். இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும். விவசாயம் நன்றாக இருக்கும். அரசியல் கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை பின்னடையும். உலக அளவில் புதிய நோய் தாக்குதல் வரலாம்.

வெளிநாடுகளில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர். இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.

முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.

விளையாட்டு துறையில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும். எல்லையில் பதற்றம் இருக்கும். உலகத்தில் ஆங்காங்கே மத கலவரம், போர் அபாயம் இருக்கும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்கும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்படுமா? மீனாட்சி அம்மன் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்

தமிழ் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று கோவில் ஸ்தானிக பட்டர் ஹாலஸ், வாக்கிய பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார். அதில், “விசுவாவசு வருடத்தில் விவசாயம் செழிக்கும். தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். நாட்டில் பதவி மாற்றம், ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தர்மகாரியங்கள், தவங்கள் நடைபெறும். அதிக மழை, வெயில், குளிர் மற்றும் தீ விபத்துகளும் ஏற்படும். புதிய வரிவிதிப்பின் மூலம் விலைவாசி உயரும். அதனால் நாட்டில் போராட்டங்கள் ஏற்பட்டு, அரசியல்வாதிகளால் அணி மாற்றம் ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Post

இது கூட தெரியாம இருக்கீங்க.. CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்.. வெளுத்து வாங்கிய மக்கள்

Posted by - March 12, 2024 0
விஜய் நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் தான்,…

உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி – ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”

Posted by - May 26, 2025 0
டெல்லிக்கு போனதாக புலம்பியது போதும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கதறுவதை தமிழ்நாடே ரசிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

பொங்கல் பரிசு ரூ.1000… ரேஷன் கடைகளில் வழங்கும் தேதி அறிவிப்பு

Posted by - December 23, 2022 0
Ponga Gift | பொங்கல் தொகுப்பு உடன் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *