ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

207 0

வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான என பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்திற்கு வருமான வரி அதிகாரிகள் வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் காத்திருந்து அதன்பிறகு சோதனையை தொடர்ந்தனர்.இதுபோலவே கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மூன்று வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்திலும் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

Posted by - January 19, 2023 0
Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை…

“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - January 20, 2025 0
கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில்…

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

கும்பகோணம்:கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி… கும்பகோணத்தில் பரபரப்பு

Posted by - February 3, 2025 0
நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *