கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ விஜய்தான்.. தளபதியே சொன்ன வார்த்தை இதுதான்!

273 0

கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான்தான் என நடிகர் விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாக உள்ள கடைசி படம் ஜனநாயகன். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளுக்கு மத்தியில் ஜனநாயகன் படத்தின் பணிகளையும் விஜய் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், விஜய் கடந்த 2019ம் ஆண்டு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2009ம் ஆண்டு நடந்தது. இதில் பங்கேற்ற விஜய்,

டாப் கியர் ஹீரோ சூர்யா:

இன்று தமிழ் சினிமாவில் நம்ம சூர்யா டாப் கியரில் போய் கொண்டிருக்கும் ஹீரோ. தன்னைத்தானே வருத்திகிட்டு நடிக்குறாரு அவருக்கு என்னோட வாழ்த்துகள். கே.எஸ்.ரவிக்குமார் சார் தசவாதாரத்திற்கு பிறகு எந்த படம் பண்ணாலும் எதிர்பார்ப்பு உண்டாகிடும். சில ஷாட் தசாவதாரம் படத்துல எப்படி பண்ணாருனே தெரியல. என்ன வேணும்னாலும் நாம யோசிக்கலாம்.
செட் ஆகாத ஒரே ஹீரோ விஜய்:

 

காட்சியா கொண்டு வர்றது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை அந்த படத்துல ரொம்ப ஃபெர்பெக்டா பண்ணிருந்தாரு.  எனக்கு தெரிஞ்சு 15, 16 வருஷம் உச்சத்துல இருக்குற ஒரே டைரக்டர் அவரு மட்டும்தான்னு நினைக்குறேன். அவருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான் மட்டும்தான்னு நினைக்குறேன். நாம மறுபடியும் பண்ணி ஒரு ஹிட் கொடுக்கனும் சார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிக்கு முத்து, படையப்பா படங்களையும், கமல்ஹாசனுக்கு அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவாதாரம் ஆகிய படங்களையும், அஜித்திற்கு வில்லன், வரலாறு ஆகிய படங்களையும் வெற்றிப் படங்களாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, சரத்குமார், தெலுங்கு நடிகர் பாலய்யா என பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

மின்சார கண்ணா தோல்வி:

அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக என தொடர் ப்ளாக்பஸ்டர் படங்களை வருடத்திற்கு ஒன்றாக தந்து கொண்டிருந்த நிலையில் படையப்பா எனும் மாபெரும் வெற்றிப்படத்தை ரஜினிகாந்தை வைத்து தந்தார். ரஜினியை வைத்து இந்த படத்தை இயக்கிய பிறகு அவர் இயக்கிய படம் மின்சார கண்ணா.

மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டிருந்த விஜய்யை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய அந்த படத்தின் பாடல்கள் தேவாவின் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குடும்ப படமான அந்த படம் இன்று தொலைக்காட்சிகளில் ரசிக்கப்பட்டாலும் அன்று திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

மீண்டும் இணையாத கூட்டணி:

மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சுமாரான வெற்றியே பெற்றது. இதை குறிப்பிட்டே நடிகர் விஜய் கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான்தான் என்று பேசியுள்ளார். அதன்பிறகு நடிகர் விஜய்யும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து எந்த படத்திலும் பணியாற்றவில்லை. 2019ம் ஆண்டு பாலய்யாவை வைத்து ரூலர் படத்தை எடுத்த பிறகு கே.எஸ்.ரவிக்குமார் எந்த படத்தையும் இயக்கவில்லை. தற்போது அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

Related Post

எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் உருக்கம்

Posted by - November 24, 2023 0
விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது . கௌதம் வாசுதேவ் மேனன்…

54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யாவின் திருமணம் எப்போது.. அவரே கூறிய பதில், இதோ

Posted by - June 7, 2023 0
எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் கேம்…

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

Posted by - May 28, 2025 0
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது இறந்த…

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

என்ன பாக்யா குடும்பமே இரண்டா கிடக்குது.. இதுல எலக்சன்ல நின்னு என்ன கிழிக்க போற ….

Posted by - December 2, 2022 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரியில் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டார் கோபி. ஆனால் கோபியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *