லாக்கப் மரணம்; விஜய்- முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

110 0

சிவகங்கை காவல்துறை மரணத்தில் திமுக அரசை அராஜக அரசு என்றும், சிறப்பு விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக-வை விமர்சித்த நிலையில், தவெக தலைவர் விஜய் மட்டும் வாய் திறக்காமலே இருந்தார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

மக்கள் மனதில் கேள்விகள்:

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

மனிதாபிமனற்ற துறை:

எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.

உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்:

இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா?

கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.

சிறப்பு விசாரணைக்குழு:

அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

அராஜக அரசு:

இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்.

இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

விஜய் முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

Related Post

சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

Posted by - February 14, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக…

”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

Posted by - January 31, 2025 0
பெரியாரை விமர்சித்து வரும் சீமானுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை என முதலமைச்சர்…

யாருக்கும் பிடிக்காத 5 ராசிக்காரர்கள்: யார் யார்னு தெரியுமா?

Posted by - October 16, 2023 0
பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது. ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில…

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *