டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

128 0

திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார்.

இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து மெல்ல நகரும் டிட்வா புயல் இன்று (நவ.29) டெல்டா பகு​தி​யில் செயலிழக்​கும்.

இன்​றும், நாளை​யும் டெல்டா மாவட்ட கடற்கரையையொட்டி சில மணி நேரம் நீடித்​து, பிறகு மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து நாளை புதுச்​சேரி- மாமல்​லபுரம் இடையே மேலும் செயலிழந்து கரையை கடக்​கும்.

இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் ராம​நாத​புரம், புதுக்​கோட்​டை, சிவகங்​கை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை, காரைக்​கால், மயி​லாடு​துறை, திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர், கடலூர் மாவட்​டங்​களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்​றும் மிக கனமழை பெய்​யும்.

அதே​போல, இன்று முதல் டிச.1 வரை சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணாமலை, ராணிப்​பேட்​டை, புதுச்​சேரி மாவட்​டங்​களி​லும் 48 மணி நேர தொடர் கனமழை இருக்​கும்.

டெல்டா மாவட்​டங்​கள் முதல் சென்​னை, திரு​வள்​ளூர் மாவட்​டம் வரை கடலோரப் பகு​தி​களில் பாதிப்​பு​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, வேலூர் மாவட்​டங்​களி​லும் பாதிப்பு இருக்​கும்.

தூத்​துக்​குடி, விருதுநகர், மதுரை, திண்​டுக்​கல், கரூர், நாமக்​கல், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி மாவட்​டங்​களின் கிழக்​குப் பகு​தி​கள் மற்​றும் திருப்​பத்​தூரிலும் கனமழை இருக்​கும். மேற்கு மாவட்​டங்​களில் மித​மானது முதல் சற்று கனமழை ஆங்​​காங்கே இருக்​கும்.

இந்த தாழ்வு மண்​டலம் டெல்டா பகு​தி​களில் கடற்​கரைக்கு மிக நெருக்​க​மாக நகர்ந்து வட கடலோரத்தை அடை​யும் என்​ப​தால் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்​தில், அனைத்து கடலோர மாவட்​டங்​களி​லும் நாளை வரை மித​மான காற்று வீசும். இவ்​​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Related Post

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் – புகைப்படங்கள்

Posted by - January 6, 2023 0
தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அண்ணாமலையார் திருக்கோயில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்…

‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..’ அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்…

Posted by - December 14, 2022 0
Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.…

வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

Posted by - January 2, 2024 0
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? புரோட்டீன்,…

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *