என்னது, 2026ல் விஜய்தான் முதல்வரா! படத்தில் இடம்பெற்ற காட்சி.. வைரலாகும் போஸ்டர்

139 0

விஜய்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதுவே அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் விஜய்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி, நரேன் என பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

வருகிற 2026ம் ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்யின் கடைசி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அரசியல்

விஜய்யின் அரசியல் வருகை குறித்து நாள்தோறும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சினிமாவை விட அரசியலில் மிகவும் கடுமையான விமர்சனங்களை விஜய் எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தளபதி விஜய்தான் என அறிவிக்கப்பட்டது.

வருகிற 2026ம் ஆண்டு தமிழக தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில், 2026ல் விஜய்தான் முதல்வர் என கூறி போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் யாதும் அறியான். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது. நேரத்தை கான்சப்ட்டாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ட்ரைலரில் வரும் ஒரு காட்சியில் உள்ள போஸ்டரில் 2026ல் விஜய் முதலவர் ஆகிவிட்டார் என்று காட்டியுள்ளனர். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க..

என்னது, 2026ல் விஜய்தான் முதல்வரா! படத்தில் இடம்பெற்ற காட்சி.. வைரலாகும் போஸ்டர் | Vijay Become Cm In 2026 In Movie Traliler

Related Post

தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted by - November 8, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

இன்று வெயில் அதிகரிக்கும்… மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Posted by - May 15, 2023 0
தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று…

நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பது அவமானம் – சீமான் விமர்சனம்

Posted by - June 18, 2023 0
திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது என சீமான்…

EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்… மின்சார வாரியம் அறிவிப்பு..

Posted by - November 26, 2022 0
ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *