”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

203 0

பாஜகவுடன் கூட்டணி என்பதை  முதல்வர் ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது எனவும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி:

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக பாஜக அமைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். ஆனால் மதுரை முருகன் மாநாட்டில் அண்ணா மற்றும் பெரியார் குறித்தான சர்ச்சை வீடியோ குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்

எடப்பாடி பேச்சு:

இந்த நிலையில் உளூந்துர்பேட்டையில்  நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுகவின் வெற்றிக்கு இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களைப் பாருங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் 25 வாக்குகளை அதிமுக வேட்பாளருக்குப் பெற்று கொடுக்க வேண்டும். நமக்குக் கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம். .

திமுகவுக்கு கவலை:

பாஜகவுடன் கூட்டணி என்பதை  முதல்வர் ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை. ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது வாக்குகள் சிதறாமல் இருக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம்.

தனிபெரும்பான்மையுடன் ஆட்சி:

அதிமுக அழிந்துவிடும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட. கட்சி அதிமுக. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.

”எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது:”

அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று திமுக கூட்டணிக் கட்சியினர் கூறுகிறார்கள். எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. ஒவ்வொரு தொண்டரின் உடலிலும் ஓடுவது அதிமுகவின் ரத்தம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கூட, கருணாநிதியால் அதிமுகவை வீழ்த்த முடியவில்லை. அத்தனை முயற்சிகளும் தூள் தூளாக்கப்பட்டது. ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

’பொய் வாக்குறுதி”

2011ல் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுகவால் அமர முடியவில்லை அதிமுகவை விமர்சனம் திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை 2021ல் மக்களை ஏமாற்றுவதற்காக 500க்கும் மேலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு,  100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி ஆவேசமாக தெரிவித்திருந்தார்

Related Post

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

“அட கடவுளே” நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில்.. AK-க்கு என்னாச்சு..? நாளை Birthday வாச்சே..!

Posted by - April 30, 2025 0
பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கு சென்றிருக்கும் அஜித்குமாருக்கு என்ன…

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

Posted by - June 18, 2025 0
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர். தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன்…

“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

Posted by - April 10, 2024 0
ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *