இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை

93 0

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டோ பொதுச்செயலாளர் எச்சரிக்கை:

இந்தியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தால், கடும் வரிவிதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என, நாட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ஆயுதங்களை வழங்க உள்ளதாகவும் ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு கடும் வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த மறுநாளே, அமெரிக்க செனட்டர்கள் உடனான சந்திப்பில் மார்க் இவ்வாறு பேசியுள்ளார்.

100 சதவிகிதம் வரி விதிப்பேன்”

அந்த உரையில், “ஒருவேளை நீங்கள் சீனாவின் அதிபாராக இருந்தலோ, இந்தியாவின் பிரதமராக இருந்தாலோ அல்லது பிரேசிலின் அதிபராக இருந்தாலோ, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு தொடர்பான வர்த்தகத்தை தொடர்ந்தால் பின்பு உங்களுக்கே தெரியும். மாஸ்கோவில் உள்ள நபர் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால், அவர்களுடன் வணிகள் செய்யும் நாடுகள் மீது நான் 100 சதவிகிதம் வரி விதிப்பேன்.

குறிப்பிட்ட மூன்று நாடுகளிடமும் நான் ஊக்கப்படுத்துவது என்னவென்றால், பீய்ஜிங் அல்லது டெல்லியில் நீங்கள் வாழ்பவராக இருந்தால், இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டும். இல்லையெனில் எங்களது வரி விதிப்பு உங்களை கடுமையாக பாதிக்கக் கூடும். சீனா, இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு தலைவர்கள், ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு பேசி, அமைதி பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்த வலியுறுத்த வேண்டும்” என நாட்டோ பொதுச்செயலாளர் பேசியுள்ளார்.

மிரட்டிப் பார்க்கும் ட்ரம்ப்:

உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக, ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த அமெரிக்கா மற்றும் நாட்டோ அமைப்பு தீவிரம்காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, வான் தாக்குதலை தவிர்க்க அதிநவீன ஆயுதங்களை அனுப்புவதோடு, ரஷ்ய பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 50 நாட்களுக்குள் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டல், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கு உதவி செய்யும் நாடுகள் மீது கடும் வரி விதிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் கூட்டாளி இந்தியா:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடுகளில் முதன்மையாக நாடுகளாக உள்ளன. ட்ரம்ப் பொருளாதாரத் தடைகளை விதித்தால், இந்த நாடுகள் குறிப்பாக இந்தியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். உலகளாவிய விலைகள் ஏற்கனவே நிலையற்றதாக இருக்கும் நேரத்தில், இந்த நடவடிக்கை எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து செலவுகளை அதிகரிக்கக்கூடும்.

டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் பேசுகையில், “பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது, ஆனால் இறுதி எச்சரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் எந்த பலனையும் தராது” என்றார்.

Related Post

Whatsapp | இனி வாட்ஸ் அப்பில் இந்த சேவைகளை பயன்படுத்த கட்டணம்..! வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - June 19, 2025 0
சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை ஒளிபரப்ப மெட்டா திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வணிக வாய்ப்புகளை பெருக்க முடியும் என்றும் மெட்டா கருதுவதாக…

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Posted by - August 20, 2025 0
இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொல்வதற்காகச்  சீனா செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ டெல்லியில்…

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. “பச்சையா” ஆமாம்னு பதில் சொன்ன Gemini AI.. மோடியிடம் மன்னிப்பு கேட்ட Google!

Posted by - March 7, 2024 0
இந்திய பிரதமர் மோடி (PM Modi) பற்றிய கேள்விக்கு “ஆமாம்” அவர் அப்படிப்பட்ட ஆளுதான் என்று பதில் கூறியதன் விளைவாக.. கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ…

பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் – என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - May 26, 2025 0
இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் துணை பாதுகாப்பு பிரச்னை மட்டுமே என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ”பாகிஸ்தானை வளர்த்துவிடும்…

ஜப்பானில் விசித்திர நிகழ்வு- தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

Posted by - February 16, 2023 0
டோக்கியோ: ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *