விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..

96 0

எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் பெரும்  வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பின்  தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது.  இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தைப் போல் இப்படம் ரசிகர்களை கவருமா என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் முதல் பாகத்திற்கு அருகில் கூட படம் இல்லை என்பதே நிதர்சனம்

தேசிங்கு ராஜா 2 கதை

நாயகனான குலசேகர பாண்டியன் (விமல்) காவல் ஆய்வாளராக இருக்கிறார். மற்றொரு ஏரியா பெண் காவல் ஆய்வாளராக நடித்துள்ளார் புகழ். இருவருக்கும் இடையில் யார் பெரிய ஆள் என்கிற ஈகோ போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் பிரபல ரெளடி ஒருவர் கொல்லப்படுகிறார். எம்.எல்.ஏ ரவி மரியா தான் இந்த கொலையை செய்திருப்பதாக அந்த ரெளடி கும்பல் சந்தேகிக்கிறது. இதனால் அவனது மகனை கொல்ல திட்டமிடுகிறது. தனது மகனை காப்பாற்ற ரவி மரியா விமலிடம் உதவி கேட்கிறார். தங்களது ஈகோ மோதலில் விமலும் புகழும் எம்.எல்.ஏ மகனை எப்படி காப்பாறுகிறார்கள் என்பதே தேசிங்கு ராஜா 2 படத்தின் கதை.

விமர்சனம்

உண்மையைச் சொன்னால் இதுதான் கதை என்று சொல்லும் அளவிற்கு படம் தெளிவாகவே இல்லை.  சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ் என படத்தில் இத்தனை நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும் எந்த காமெடிக்கும் சிரிப்பு வரவில்லை. சிதறலான திரைக்கதை , காமெடி என்கிற பெயரில் உளறிக் கொட்டும் கதாபாத்திரங்கள் என  கவனமீர்க்காத பின்னணி இசை , என சராசரிக்கும் கீழே நிற்கிறது படம். வேண்டாவர்களை யாரையாவது பழிவாங்க வேண்டும் என்றால் ஏமாற்றி தேசிங்கு ராஜா 2 படத்திற்கு கூட்டிச் சென்று உட்கார வைக்கலாம்.

Related Post

நடிகையின் விவாகரத்திற்கு இதுதான் காரணமா.? பல வருடம் கழித்து வெளியான குட்டு

Posted by - April 17, 2025 0
நடிகை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலுமே மிகவும் பிரபலமானவர் தான். தன்னுடைய துறையில் பணியாற்றிய வரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகையின் போக்க சரியில்லை…

பாண்டிச்சேரியில் உல்லாசம், நயன்தாரா தனுஷ் விவகாரம்.. தனுஷ் அப்பா என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - November 18, 2024 0
நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் பல கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக சிக்கியுள்ளது. இதை பற்றி, நாட்டிற்கு ரொம்ப முக்கியமான…

பாபா ரீ ரிலீஸ்.. மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி, எதிர்பார்க்காத ரசிகர்கள்

Posted by - December 10, 2022 0
பாபா ரீ ரிலீஸ் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படம் அப்போது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 20 ஆண்டுகளுக்கு பின்…

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை – ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Posted by - June 26, 2023 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் “மாவீரன்”. இந்த…

வைரலாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் புதிய போஸ்டர்

Posted by - February 20, 2023 0
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *