வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

131 0

கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தனது காரை விற்பனை செய்வதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த கும்பகோணம் சென்னியமங்கலத்தை சேர்ந்த வீரசெல்வம் என்பவர் கார் குறித்து விசாரித்துள்ளார். மேலும், வால்பாறை வரையெல்லாம் வர முடியாது, வேண்டுமானால் காரை எடுத்துகொண்டு கும்பகோணம் வாருங்கள், அதற்கான பணத்தை நான் தறுகிறேன் என கூறியுள்ளார்.அதனை நம்பிய சக்திவேல் , வால்பாறையில் இருந்து கும்பகோணத்திற்கு காரை எடுத்து சென்றுள்ளார். சாக்கோட்டை பகுதியில் சக்திவேலை சந்தித்த வீரசெல்வம், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிகொள்வதாக கூறியுள்ளார். வழக்கம்போல இதையும் நம்பிய சக்திவேல் அதற்கு சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து, ஓட்டி பார்ப்பதற்காக காரை எடுத்து சென்ற வீரசெல்வம் கடைசி வரை திரும்பி வரவில்லை. இது குறித்து சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில், காரை திருடி சென்ற வீரசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Post

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - May 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

மெஹந்தி அலங்கார தொழில்…சிறிய முதலீடு…அதிகப்படியான இலாபம்…!

Posted by - December 20, 2024 0
தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள்,…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா ஜே.என்.1.. பரபரக்கும் ஆய்வுகள்!

Posted by - December 28, 2023 0
சென்னை: தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஜே.என். 1…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *