சூரரைப்போற்று நடிகையிடம் அத்துமீறல்.. மன்னிப்பு கோரிய சட்டக்கல்லூரி மாணவர் சங்கம்..

366 0

அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அந்த மாணவர், அவரை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார்அபர்ணா பாலமுரளி

மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துக் கொண்டதையடுத்து கல்லூரியின் மாணவர் சங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.

எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் தங்கம் திரைப்பட புரொமோஷனின் போது, அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துகொண்டதற்காக அக்கல்லூரியின் மாணவர் சங்கம் மன்னிப்பு கேட்டுள்ளது. சமூக ஊடகப் பதிவில், இந்த சம்பவம் வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கல்லூரி யூனியன் கூறியுள்ளது. இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமாக பரிசீலிப்பதாக அந்த அறிக்கையில் யூனியன் உறுதியளித்துள்ளது.Google വാർത്ത

“இன்று (18/01/2023) சட்டக் கல்லூரியில் நடைபெற்ற யூனியன் தொடக்க விழாவில் திரைப்பட நடிகைக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது மிகவும் வருந்தத்தக்கது. சம்பவத்தின் போது, யூனியன் அதிகாரி அத்தகைய நடத்தையைத் தடுக்க முயன்று சங்கத்தின் சார்பாக வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சந்தித்த சிரமத்திற்கு கல்லூரி யூனியன் மனதார வருந்துகிறது. யூனியன் இதுபோன்ற பிரச்னையை மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி வெளிவரவிருக்கும் தங்கம் திரைப்படத்தை புரொமோட் செய்ய எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரிக்கு வந்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அவருடன் வினீத் ஸ்ரீனிவாசனும் வந்திருந்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் அவரிடம் அத்துமீறி நடந்துக் கொண்டார்.

Related Post

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

Posted by - April 1, 2023 0
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய…

4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?

Posted by - July 3, 2023 0
மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்தது வடிவேலு அவர்களின் நடிப்பை…

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி திடீர் விலகல் – விளக்கத்தில் உருக்கம்

Posted by - November 13, 2025 0
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை…

யூடியூபில் சம்பவம் செய்யும் லால் சலாம் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ்..

Posted by - December 13, 2023 0
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 12) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *