டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

131 0

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இதில் 70 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 30 சதவீதம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், கொள்முதல் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்டுள்ள இளம் சம்பா பயிர்களையும் மழைநீரில் மூழ்கியுள்ளன.குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம், பூண்டி, நல்லவன்னியன் குடிகாடு, அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்கதிர்கள், மன்னார்குடி, வடுவூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, திருவாரூர், காட்டூர் போன்ற பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள், மயிலாடுதுறை, கொள்ளிடம், குத்தாலம் போன்ற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், நாகை மாவட்டத்தில் தலையாமழை, கீராந்தி, சின்னதும்பூர், பெரிய தும்பூர், சோழவித்தியாபுரம், கிராமத்துமேடு, கருங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள், கீழ் வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் போன்ற பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கர் இளம் சம்பாபயிர்கள் மழைநீரில் மூழ்கியும், சூழ்ந்தும் உள்ளன.

இந்த மழைநீர் வடிந்தால் மட்டுமே குறுவை நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியும். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வயல்களில் உள்ள தண்ணீரை வாய்க்கால்கள், வடிகால்கள் மூலம் வடிய வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், அறுவடைக்குதயாரான நெற்கதிர்களில் நெல்மணிகள் முளைத்துவிடும் என்பதாலும், இளம் சம்பாபயிர்கள் அழுகிவிடும் என்பதாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அடி மேல் அடி: தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட 6 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களில், 4.20 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. ஆனால், அறுவடை செய்த நெல்லில் 20 சதவீத நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நெல்லின் ஈரப்பதம் இயல்பாகவே அதிகமாக காணப்படுகிறது. இதனால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும், அறுவடை செய்யாமல் உள்ள நெற்கதிர்களையும், இளம் சம்பா பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. நெல் மணிகள் முளைத்துவிடும் என்பதாலும், இளம் சம்பா பயிர்களை அழுகிவிடும் என்பதால் விவசாயிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Related Post

“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

Posted by - December 31, 2025 0
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு…

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை – திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!

Posted by - October 12, 2024 0
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில்…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

Posted by - November 30, 2023 0
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…

ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

Posted by - November 26, 2024 0
தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார். முன்னாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *